தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் ரோடு புகையில்லாவட்டாரம் விரிவடைகிறது

1 mins read
0f723ac4-6ea0-4d81-a2b3-7004ff73d208
சறுக்கு விளையாட்டுப் பூங்காவும் புகையில்லா வட்டாரமாக மாறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள புகையில்லா வட்டாரத்திற்குள் தற்போது சோமர்செட் ஸ்கேட் பார்க் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சேர்க்கப்படுகின்றன.

இந்த மாற்றம் பிப்ரவரி 1ஆம் தேதி அமலுக்கு வரும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

அதாவது புகையில்லா வட்டாரம் 111 சோமர்செட் கட்டடம் அருகில் உள்ள சோமர்செட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து வெளியேறும் பாதை, எக்ஸீட்டர் ரோடு மற்றும் கிலினி ரோடு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்று பிப்ரவரி 1ஆம் தேதி வாரியம் கூறியது.

ஆர்ச்சர்ட் ரோடு புகையில்லா வட்டாரம், பிளாசா சிங்கப்பூரா முதல் கிரேஞ்ச் ரோடு வரை அடுத்துள்ள ஓல்ட்ஹாம் லேன் வரை விரிவடைகிறது.

இதனை சுமூகமாக அமலாக்க பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரை முதல் இரண்டு மாதங்களுக்கு ஆலோசனை அணுகுமுறை பின்பற்றப்படும்.

எக்ஸீட்டர் ரோடு, கிலினி ரோடு வழியாக புகையில்லா வட்டாரத்தில் மீண்டும் புகைபிடித்தால் அவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் எச்சரித்தது.

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து விரிவுபடுத்தப்பட்ட புகையில்லா வட்டாரத்தில் புகைபிடிப்பவர்களுக்கு எதிராக ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்