ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் முதியோருக்கு சீனப் புத்தாண்டு மதிய விருந்து

எதிர்வரும் சந்திரப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில், சனிக்கிழமையன்று (பிப்ரவரி 3) மதிய உணவு விருந்தை அளித்து முதியோர் பராமரிப்பு இல்லத்தினரையும் சைனாடவுன் வட்டாரவாசிகளையும் மகிழ்வித்தது.

22ஆம் ஆண்டாக நடைபெற்றுள்ள இந்த விருந்து நிகழ்ச்சி, ஆலயத்தின் முதல் தளத்திலுள்ள உணவு பரிமாறும் மண்டபத்தில் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. ஸ்ரீ நாராயண மிஷன் (சிங்கப்பூர்), பன்யான் ஹோம் ‘அட்’ பெலாங்கி வில்லேஜ், சன்லவ் இல்லம், கிரேத்தார் ஆயர் மூத்த குடிமக்கள் நடவடிக்கை மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் 100 முதியோர் விருந்தில் இணைந்தனர்.

சிவப்பு, கறுப்பு, சாம்பல் எனப் பல வண்ணங்களில் ஜொலித்த சிங்க உருவத்தைப் போர்த்திய இளம் கலைஞர்கள், விருந்து மேசைகளிடையே கொட்டும் மேளங்களுக்கு ஏற்ப வளைந்து நெளிந்தாடினர். இந்நடனத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் எரிக் சுவா, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

தமிழ், மலாய் மற்றும் சீன மொழிகளில் நிகழ்ச்சி படைத்த ஆர்.கே. மைக், முதியோரைத் தட்டி எழுப்பி, ஆடலிலும் பாடலிலும் ஈடுபடுத்தினார். பழைய ஹாக்கியன் பாடல்களுக்கும் காலஞ்சென்ற எம்.ஜி.ஆர் திரைப்பாடல்களுக்கும் ஒருமித்த உற்சாகத்துடன் பாடி ஆடிய முதியவர்கள் வெட்கத்தை மறந்து உல்லாசத்துடன் இருந்ததைக் காண முடிந்தது.

17 வட்ட மேசைகளில் 10 வகையான சீன, இந்திய சைவ உணவுகள் பறிமாறப்பட்டன. இவை அனைத்தும் முதியோருக்கு ஏற்ற வகையில் ஆரோக்கியமாகத் தயாரிக்கப்பட்டதாக சமையற்கலை வல்லுநரும் தொண்டூழியருமான பத்மநாதன் கூறினார். “எண்ணெய், காரம் அதிகமில்லாத மென்மையான உணவுகளைப் பரிமாறினோம்,” என்றும் அவர் கூறினார்.

கிட்டத்தட்ட 80 தொண்டூழியர்களின் கைகள் இந்நிகழ்ச்சிக்காக இணைந்தன. ஆலயத்தைச் சார்ந்த 14 தொண்டூழியக் குழுக்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் ஒன்றுகூடி இந்நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டதாக ஆலயத்தின் துணைச் செயலாளரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான எம். ரவிகுமார் தெரிவித்தார். “அன்பளிப்புப் பையிலுள்ள 14 பொருள்களையும் எங்கள் ஆலயத்தின் தொண்டூழிய குழுக்கள் வழங்கி ஆதரவு அளித்தன,” என்று அவர் கூறினார்.

சிறு வயதில் தாய் தந்தையர் இழந்த தமக்கு இங்கு முதியோருக்குச் சேவையாற்றுவதில் நற்பேறு உணர்வதாகத் தொண்டூழியரும் சுகாதார உதவியாளரான விஜயலட்சுமி சங்கரன்பிள்ளை, 50, கூறினார்.

‘ஸ்ரீ துர்க்கையம்மனடி பிள்ளைகள்’ மகளிர் தொண்டூழியக் குழுவைச் சேர்ந்த புவனேஸ்வரி தனபாலன், 62, இந்த நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் ஆதரவற்றோர் என்பதை அறிந்தபோது வருத்தம் ஏற்பட்டாலும் எல்லாரும் இப்படி ஒன்றாகக் கொண்டாட முடிவதை எண்ணி மகிழ்கிறோம்,” என்று அவர் கூறினார்.

ஒரு நாள் விடுப்பு எடுத்து இந்நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறிய தொண்டூழியர் செல்வராஜ் தனபாலன், 50, “வயதானோரை ஒன்று திரட்டி அவர்கள் வயிறாரச் சாப்பிடுவதைக் காணும்போது எங்கள் உள்ளம் குளிர்ந்தது,” என்று தனியார் வாகனமோட்டுநரான திரு செல்வராஜ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!