சிங்கப்பூர் வங்கிகளின் லாபம் உச்சத்தை எட்டக்கூடும்

1 mins read
387abddf-ad7e-4001-87a2-8d351f9adc02
வங்கிகள் அவற்றின் சொத்து நிர்வாக நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முன்னணி வங்கிகள் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியதாகக் கருதப்படுகிறது.

அதிகரித்த வட்டி விகிதம் அதற்குக் காரணம்.

பெரிய பொருளியல்களின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க முனைந்துள்ள நிலையில் வளர்ச்சி மெதுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

சென்ற ஆண்டு (2023) 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3 பில்லியன்) அளவிலான பணமோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வங்கிகள் அவற்றின் சொத்து நிர்வாக நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதல்நிலை வங்கியான டிபிஎஸ் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் லாபம் ஈட்டத் தொடங்கும். யுஓபி வங்கி பிப்ரவரி 22ஆம் தேதி முதலும் ஓசிபிசி வங்கி பிப்ரவரி 28லிருந்து லாபம் ஈட்டத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்