வியட்னாமிலிருந்து இறக்குமதியான கடலுணவை திரும்பப் பெற உத்தரவு

1 mins read
39c83bb3-4263-454b-af41-990203c123c3
வியட்னாமிலிருந்து இறக்குமதியான லி சுவான் கடலுணவு உருளைகளைத் திரும்பப் பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.  - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

வியட்னாமிலிருந்து இறக்குமதியான கடலுணவு உருளைகளைத் திரும்பப் பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

லி சுவான் கடலுணவு உருளைகளில் (750 கிராம்) முட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதன் பொட்டலத்தில் அது குறிப்பிடப்படவில்லை என்று பிப்ரவரி 8 அன்று வெளிட்ட அறிக்கையில் அமைப்பு கூறியது.

முட்டை ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்ட கடலுணவு உருளைகளைத் திரும்பப்பெற இறக்குமதியாளரான லி சுவான் ஃபுட் புரோடக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைப்பு கூறியது.

உணவுப் பொருள்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கை நடந்து வருகிறது.

சிங்கப்பூர் உணவு விதிமுறையின் கீழ், உணவு ஒவ்வாமை மூலம் பயனீட்டாளர்களைப் பாதுகாக்க உணவுப் பொட்டல வில்லைகளில், ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்று அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்