தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலை வன்முறை: சிங்கப்பூர் காரின் உரிமையாளரைத் தேடும் ஜோகூர் காவல்துறை

1 mins read
3c401b3b-866a-43f8-ae26-0a641e965e14
சம்பவம் பதிவானதாகக் கருதப்படும் காணொளியில் இடம்பெற்ற காட்சி. - காணொளிப் படங்கள்: அரிஃப் டெனியல் / ஃபேஸ்புக்

சாலையில் ஒரு காரின் கண்ணாடியை உடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட காரின் ஓட்டுநரை மலேசியாவின் ஜோகூர் மாநிலக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மலேசியாவின் வடக்கு-கிழக்கு விரைவுச்சாலையில் வடக்கே சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. சனிக்கிழமை (பிப்ரவரி 10) பிற்பகல் 2.36 மணிக்கு சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டதாக தற்காலிக காவல்துறை ஆணையர் எம். குமார் தெரிவித்தார். அவர் ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவரும் ஆவார்.

இச்சம்பவம் பதிவானதாகக் கருதப்படும் 54 வினாடிக் காணொளியை ஃபேஸ்புக் பயனர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். அந்தக் காணொளி குறைந்தது 26,000 முறை பார்க்கப்பட்டது, 3,000 முறை பகிரப்பட்டது.

குறைந்தது 694 கருத்துகள் பதிவிடப்பட்டன, 2,300 பேர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்