2024 வளர்ச்சி முன்னுரைப்பில் மாற்றமில்லை; 1% - 3% ஆகவே இருக்கும்

உலகப் பொருளியல் சுருங்கும் அபாயம் தொடர்ந்து குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், இந்த ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடு வரை இருக்கும் என்ற முன்னுரைப்பு அப்படியே இருக்கிறது.

கடந்த 2022ல் 3.8 விழுக்காடாகப் பதிவான பொருளியல் வளர்ச்சி, 2023ல் மெதுவடைந்து 1.1 விழுக்காடாகக் குறைந்தது என்று வர்த்தக, தொழில் அமைச்சு பிப்ரவரி 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியது. ஜனவரியின் 1.2 விழுக்காடு அதிகாரபூர்வ மதிப்பீட்டைவிட இது குறைவு.

ஆண்டு அடிப்படையில் 2023ன் இறுதிக் காலாண்டு வளர்ச்சி 2.2 விழுக்காடாக இருந்தது. இது முன்னதாகக் கணிக்கப்பட்ட 2.8 விழுக்காட்டை விடக் குறைவாகும். இது ப்ளூம்பெர்க்கின் கருத்துக்கணிப்பின் சராசரி முன்னுரைப்பான 2.5 விழுக்காட்டையும் விடக் குறைவு.

2024ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் வெளிப்புறத் தேவை நவம்பர் மாதத்தில் கடைசியாக மதிப்பாய்வு செய்யப்பட்டதிலிருந்து பெரும்பாலும் மாறாமல் உள்ளதாக அமைச்சு கூறியது.

உலகளாவிய மின்னியல் பொருள்களுக்கான தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் வட்டார பொருளியல் வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவுக்கான நிரந்தரச் செயலாளர் டாக்டர் பெ சுவான் ஜின் கூறினார்.

எனினும், உலகப் பொருளியல் இன்னும் கடுமையான வீழ்ச்சி அபாயங்களை எதிர்கொள்கிறது.

சிங்கப்பூரின் உற்பத்தி, வர்த்தகம் தொடர்பான துறைகள் உலகளாவிய மின்னியல் தேவையின் மாற்றத்துடன் இணைந்து படிப்படியான வளர்ச்சி மேம்பாட்டைக் காணும். குறைகடத்தி விற்பனையில் எதிர்பார்க்கப்பட்டதைவிட வலுவான மீட்சி இருப்பதால், குறிப்பாக மின்னியல், துல்லியப் பொறியியல் தொழில்துறை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முக்கிய ஏற்றுமதிகளின் வளர்ச்சி முன்னுரைப்பை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், பிப்ரவரி 15 அன்று 4 விழுக்காடு முதல் 6 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. நவம்பர் மாத 2 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வளர்ச்சி முன்னுரைப்பைவிட இது அதிகம்.

விமானப் பயணம், சுற்றுலாத்துறை தொடர்ந்து மீட்சி அடைவது, விண்வெளி, விமானப் போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட சிங்கப்பூர் சுற்றுலாத் துறை, விமானப் போக்குவரத்து தொடர்பான துறைகளிலும், சில்லறை வணிகம், உணவு, பான சேவைகள் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

“இருப்பினும், இந்தத் துறைகளில் பெரும்பாலானவற்றின் வளர்ச்சியின் வேகம் 2023ஆம் ஆண்டில் இருந்ததைவிட மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று டாக்டர் பே கூறினார்.

உற்பத்தித் துறை, 2022ன் 2.7 விழுக்காட்டு வளர்ச்சிக்கு எதிராக 2023ல் 4.3 விழுக்காடு சுருங்கியது. அதே நேரத்தில் கட்டுமானத்துறை வளர்ச்சிகண்டது.

சேவைத்துறையைப் பொறுத்தமட்டில், சொத்துச் சந்தை தொழில்துறையின் வளர்ச்சி பாதியாகக் குறைந்தது. உணவு, பான சேவைகள் தொழில்துறையின் வளர்ச்சி மிதமாக இருந்தது.

2022ஆம் ஆண்டின் 7.2 விழுக்காட்டு வளர்ச்சியிலிருந்து 2023ல் வெறும் 0.6 விழுக்காடாக சில்லறை விற்பனைக் குறியீடு பதிவானது.

வளர்ச்சியும் பணவீக்கமும் தொடர்ந்து நிச்சயமற்றதாக இருந்தபோதிலும் சிங்கப்பூரின் நாணயக் கொள்கை பொருத்தமானதாகவே உள்ளது என்றும் இதனை மத்திய வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைமைப் பொருளியல் நிபுணர் திரு எட்வர்ட் ராபின்சன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!