சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 16.8% அதிகரிப்பு

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 16.8% அதிகரிப்பு

1 mins read
7fbcc5bc-7c4c-453d-b51b-ec575c187e98
கடந்த ஜனவரி மாதம் மின்னணுவியல் ஏற்றுமதி 0.7 விழுக்காடு ஏற்றம் கண்டது. - படம்: ஸ்டெர்ய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதம் 16.8 விழுக்காடு உயர்ந்தது.

குறைகடத்தி தொடர்பான சாதனங்களின் ஏற்றுமதி ஏற்றம் கண்டதே இதற்கு முக்கிய காரணம்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுமதி 1.5 விழுக்காடு குறைந்தது.

அதையடுத்து, ஜனவரி மாதம் அது ஏற்றம் கண்டது.

புளூம்பர்க் ஆய்வு செய்த பொருளியல் நிபுணர்கள், ஜனவரி மாதத்தில் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 4.3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைத்திருந்தனர்.

ஆனால் அது அதைவிட அதிகமாக அதிகரித்துள்ளது.

ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 25.1 விழுக்காடு சரிந்தது.

மின்னணுவியல் துறையின் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதம் 0.7 விழுக்காடு அதிகரித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அது 11.7 விழுக்காடு சரிந்தது.

ஒட்டுமொத்த அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூரின் ஏற்றமதி அதிகரித்தது.

சிங்கப்பூரிலிருந்து சீனா, அமெரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், தைவான், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணெய் சாரா பொருள்களின் அளவு குறைந்தது.

குறிப்புச் சொற்கள்