2025 முதல் சில வீட்டுரிமையாளர்களின் சொத்து வரி குறையும்

2025 முதல் சில வீட்டுரிமையாளர்களின் சொத்து வரி குறையும்

1 mins read
93985ef1-f1ee-44e7-ab7d-5f1f01f2e840
மிகக் குறைந்த வரம்பு $8,000லிருந்து $12,000 ஆகவும், அதிகபட்ச வரம்பு $100,000லிருந்து $140,000 ஆகவும் 2025 முதல் உயர்த்தப்படும்.  - படம்: பிசினஸ் டைம்ஸ்

வீட்டு உரிமையாளர் வசிக்கும் குடியிருப்புச் சொத்தின் சொத்து வரியைக் கணக்கிடும் மதிப்பீட்டு குறியீடு 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும். சந்தை வாடகையில் 2022 முதல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக, அண்மைய வரி உயர்வால் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வீடுகள் பாதிக்கப்பட்டன.

மிகக் குறைந்த வரம்பு $8,000லிருந்து $12,000 ஆகவும், அதிகபட்ச வரம்பு $100,000லிருந்து $140,000 ஆகவும் 2025 முதல் உயர்த்தப்படும்.

இடையில் மதிப்பீட்டு குறியீட்டில் அதற்கேற்ற மாற்றங்கள் செய்யப்படும்.

இந்த மாற்றத்தின் மூலம், வீட்டு உரிமையாளர்கள் அதே அல்லது குறைந்த சொத்து வரி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், எந்தவொரு தள்ளுபடியையும் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன்பு. அவர்களின் சொத்தின் ஆண்டு மதிப்பு மாற்றமின்றி இருக்கும் என்று அமைச்சு கருதுகிறது,

ஒரு சொத்தின் ஆண்டு மதிப்பு என்பது குத்தகைக்கு விடப்பட்டால் அதன் மதிப்பிடப்பட்ட ஆண்டு வாடகையாகும். மேலும் இது ஒப்பிடக்கூடிய சொத்துகள் மற்றும் பிற காரணிகளின் சந்தை வாடகைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. சொத்துவரியைக் கணக்கிடுவதற்காக ஆண்டு மதிப்பு செய்யப்படுகிறது, இது செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் சிங்கப்பூரின் முதன்மையான வழி. இது ஆண்டுதோறும் செலுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்