மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் பணிபுரிந்த தாதி ஒருவர், 2018ல் ஆண் நோயாளி ஒருவரை மானபங்கம் செய்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நோயாளி சிகிச்சை பெற்ற பிறகு ஏற்பட்டது.
வயிற்றுப் பிரச்சினையால் செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் 2018 தொடக்கத்தில் மருந்தகத்திற்குச் சென்றதாக பாதிக்கப்பட்டவர் விசாரணையின்போது பகிர்ந்துகொண்டார்.
அங்கு 35 வயது தாதியான ஐவன் லீ யி வாங்கை முதன்முதலில் தான் சந்தித்ததாக அவ்அர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, லீ தன் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, தமக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் சொன்னார்.
இரண்டு சந்தர்ப்பங்களில் லீ தம்மை மானபங்கப்படுத்தியதாக அவர் கூறினார்.
விசாரணைக்குப் பிறகு, இரண்டு மானபங்கக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் லீ குற்றவாளி என மாவட்ட நீதிபதி சே யூன் ஃபாட் தீர்ப்பளித்தார்.