லஞ்சம் கொடுத்த ஆடவருக்குச் சிறை

லஞ்சம் கொடுத்த ஆடவருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Feb 2024 - 6:58 pm

1 mins read

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பயிற்சிக் கழகத்தின் இணை இயக்குநருக்கு $62,800 லஞ்சம் கொடுத்த ஆடவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதியன்று ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிஜே சினர்ஜி நிறுவனத்தின் 46 வயது செர் கெங் தான், கிறிஸ்டஃபர் டான் டோ ஙீக்கு லஞ்சம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பயிற்சிக் கழகத்தின் சந்தைப்படுத்துதல் பங்காளியாக சிஜே சினர்ஜி நிறுவனம் தொடர்வதை உறுதி செய்ய செர் லஞ்சம் கொடுத்ததாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

சொந்த லாபத்துக்காக செர் லஞ்சம் கொடுத்ததாகவும் அதன்மூலம் அவர் குறைந்தது $126,200 ஈட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர் இந்த வழக்கு தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது நபர் ஆவார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் டானிடம் $71,300 லஞ்சம் தந்த குற்றத்துக்காக 45 வயது ஜெஃப்ரி லோங் சீ கின்னுக்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்