சிங்கப்பூர் விமானக் காட்சியில் எஸ்டி எஞ்சினியரிங் ஏர்எக்ஸ் கூட்டு முயற்சி

சிங்கப்பூர் விமானக் காட்சியில் எஸ்டி எஞ்சினியரிங் ஏர்எக்ஸ் கூட்டு முயற்சி

1 mins read
e61d8da0-a67d-4b4e-bb2c-6f003484f4fa
இந்த விமானத்தின் விலைமதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. - படம்: எஸ்டி எஞ்சினியரிங்
Google News Preferred Icon

எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்துக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனத்துக்கும் இடையேயான கூட்டு முயற்சியின் மூலம், குறைந்த மட்டத்தில் பறக்கும் ஆற்றல் கொண்ட விமானத்தைத் தயாரிப்பதற்கான முதல் ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கூட்டு முயற்சியில் இறங்கிய நிறுவனமான எஸ்டி எஞ்சினியரிங் ஏர்எக்ஸ், சிங்கப்பூர் விமானக் காட்சியில் துருக்கியின் யூரேஷியா மொபிலிட்டி சொலுஷன்ஸ் நிறுவனத்துடன் விருப்பக் கடிதத்தில் கையெழுத்திட்டது. ‘ஏர்ஃபிஷ் விங் இன் கிரவுண்ட்’ ரக 10 விமானங்கள் வரை வாங்கவும் கூடுதலாக 10 விமானங்களை வாங்குவதற்கான தெரிவும் அக்கடிதத்தில் இடம்பெற்றது.

அந்த விமானத்தின் விலைமதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஏர்ஃபிஷ் ரக விமானங்களைத் தயாரிக்கும் எஸ்டி எஞ்சினியரிங் ஏர்எக்ஸ் நிறுவனம், 10 இருக்கைகள் கொண்ட ஏர்ஃபிஷ் 8 விமானங்களை யூரேஷியா மொபிலிட்டி சொலுஷன்ஸ் நிறுவனத்திடம் 2025 முதல் கட்டங்கட்டமாக விற்கும். துருக்கியின் சுற்றுப்பயணத்துறை, தனியார் போக்குவரத்துத் துறைகளுக்கு சேவையாற்றுவது இதன் இலக்கு.

குறிப்புச் சொற்கள்