ஆனந்தபவன் மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு 2024

ஆனந்தபவன் மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு 2024

படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

25 Feb 2024 - 5:30 am

2 mins read

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்தபவன் அமரர் மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு வழக்கம்போல் நடைபெற இருக்கிறது. 

அமரர் மு.கு.இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி, ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும். இவ்வாண்டு கட்டுரை நூலுக்குப் பரிசு வழங்கப்படும்.

2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை நூல்களின் 4 படிகளை, குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி பெற்ற எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நூல்களை அனுப்பி வைக்க இறுதி நாள் மார்ச் 31.

கட்டுரைத் துறையில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். மற்ற துறைகளில் பரிசு பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

நூல்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி : Association of Singapore Tamil Writers, BLK 723 # 13-149, Yishun St 71, Singapore 760723. அல்லது Aaria Creations, 32 Upper Dickson Road, Singapore 207491. இந்த முகவரியில் நேரில் சென்றும் கொடுக்கலாம்.

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து மூன்று நடுவர்கள் சிறந்த நூலைத் தேர்ந்தெடுக்க உதவுவார்கள். அந்த நூலுக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான விதிகளையும் விண்ணப்பப் படிவத்தையும் www.singaporetamilwriters.com எனும் எழுத்தாளர் கழகத்தின் இணையத் தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேல்விவரங்களுக்கு எழுத்தாளர் கழகத் தலைவர்  நா. ஆண்டியப்பன் (97849105), செயலாளர் பிரேமா (91696996) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்