துணை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் எண்ணிக்கை 25% கூடியது

துணை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் எண்ணிக்கை 25% கூடியது

1 mins read
deaac184-a68e-49a5-a2e8-553e5ec4670c
துணை சுகாதாரப் பாராமரிப்பு ஊழியர்கள் வேலையிலிருந்து விலகுவதும் அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2019 முதல் 2023 வரை துணை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு கூடியிருக்கிறது.

மருத்துவ கதிரியக்கப் பரிசோதகர், உடல் இயக்க சிகிச்சையாளர்கள், கதிரியக்க சிகிச்சையாளர்கள், பேச்சுத் திறன் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரின் மொத்த எண்ணிக்கை 2019ல் 6,000லிருந்து 2023ல் 7,500க்கு அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் இதனைத் தெரிவித்தார்.

அதே சமயத்தில் பொதுச் சுகாதார துறையைச் சேர்ந்த துணை ஊழியர்கள் வேலையிலிருந்து விலகுவதும் அதிகரித்துள்ளது.

வேலையிலிருந்து விலகுவோர் விகிதம் 2018ல் 8.99 விழுக்காடாக இருந்தது. இது, 2023ல் 11.6 விழுக்காடாக கூடியுள்ளது.

சமூகப் பராமரிப்புத் துறையில் துணை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வேலையிலிருந்து விலகும் விகிதம் 2018ல் 17.7 விழுக்காட்டிலிருந்து 2022ல் 11.3 விழுக்காடாக குறைந்தது.

பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜெரால்ட் கியாம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு ரஹாயு மஹ்லாம் இவ்வாறு பதிலளித்தார்.

மருத்துவர்கள், தாதிகளைவிட துணை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வேலையிலிருந்து விலகியது அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்