முன்னோடி ஆய்வு: செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைவழி கருவுறும் வாய்ப்புகள்

1 mins read
2024ஆம் ஆண்டு ஜனவரி வரை 590 பேர் பதிவு
20027686-beac-4565-9bcf-b3d532a86e45
கருக்கள் பொருத்தப்படுவதற்கு முன்பான மரபணுப் பரிசோதனையை ஆய்வுக்குப் பதிந்துகொண்ட 590 பேரில், 195 பேர் மேற்கொண்டுள்ளனர். - படம்: பிக்சாபே

பெண்கள் ‘ஐவிஎஃப்’ எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக கருவுறும் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் புதிய முன்னோடி ஆய்வுத் திட்டத்துக்கு ஜனவரி 2024 நிலவரப்படி 590 பேர் பதிவுசெய்துள்ளதாக பிப்ரவரி 29ஆம் தேதியன்று சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்தார்.

இந்த ஆய்வுத் திட்டத்தின்கீழ் இதுவரை 70 பேர் கருவுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த ஆய்வு தொடர்பில் மேலும் அதிகமானோர் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. கரு பொருத்தப்படுவதற்கு முன்பான மரபணுப் பரிசோதனையின் (பிஜிஎஸ்) செயல்திறத்தை மதிப்பிட இத்தேவை எழுந்துள்ளதாகக் கூறப்பட்டது.

பிஜிஎஸ் குறித்தும் முக்கியச் சுகாதாரப் பராமரிப்புச் சேவையாக இந்தப் பரிசோதனையைச் சேர்ப்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் திரு லூயிஸ் இங் (நீ சூன் குழுத்தொகுதி) எழுப்பிய கேள்விக்கு திருவாட்டி ரஹாயு இவ்வாறு பதிலளித்தார்.

முன்னோடி ஆய்வுத் திட்டம் 2017ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. ஆய்வுத் திட்டத்தில் இணைந்த 590 பேரில் 195 பேர் மட்டுமே இதுவரை பிஜிஎஸ் செய்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, முன்னோடி ஆய்வுத் திட்டத்தை, கருத்தரிக்க உதவும் தனியார் மருந்தகங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருவதாக திருவாட்டி ரஹாயு கூறினார்.

குறிப்புச் சொற்கள்