தொடங்கிவிட்டது டெய்லர் ஸ்விஃப்ட் மோகம்; தேசிய விளையாட்டரங்கில் உற்சாகம் குறையாத ரசிகர் கூட்டம்

பலரும் முணுமுணுக்கும் ஒரு பெயராகிவிட்டது, டெய்லர் ஸ்விஃப்ட். புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான இவர், சிங்கப்பூரில் நேரடியாகப் படைக்கவிருக்கும் ஆறு நாள் இசை நிகழ்ச்சிகளுக்கான 300,000க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

கார்ல்டன் ஹோட்டலில் சீனா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் தங்களின் பயணப்பெட்டிகளை வரிசையாக வைத்துள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பும் இந்தக் கலைஞரைக் காண, தென்கிழக்காசியா மட்டுமன்றி வேறு பல நாடுகளிலிருந்தும் சாங்கி விமான நிலையத்தில் ரசிகர்கள் திரளாக வந்திறங்கினர்.

மார்ச் 2ஆம் தேதியன்று பேராவலுடன் ரசிகர் கூட்டம் தேசிய விளையாட்டரங்கில் கூடத் தொடங்கியது.

கதவுகள் திறப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிற்பகல் 3.40 மணிவாக்கில், வரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர், ரசிகர்கள்.

மழைத்துளிகள் சொட்டத் தொடங்கியபோதும் ரசிகர்களின் உற்சாகம் குறையவில்லை.

மழை வந்தபோதும் உற்சாகம் குறையாமல் காணப்பட்டனர் ரசிகர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இசைநிகழ்ச்சிக்குச் செல்லவிருப்போருக்காக பிற்பகல் 4.23 மணிக்குக் கதவுகள் திறந்தன. பாதுகாப்புச் சோதனைகளுக்கான வரிசைகள் சமாளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்துவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!