தீவு விரைவுச்சாலையில் 10 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து

1 mins read
cfe44fe4-9dff-4196-a9ae-3c81653e041b
தீவு விரைவுச்சாலையில் ஸ்டீவன்ஸ் ரோடு வெளிவழிக்குப் பிறகு ஏற்பட்ட விபத்தில் ஒன்பது கார்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டதாகக் கூறப்பட்டது. - படம்: எஸ்ஜிஆர்வி/ஃபேஸ்புக்

துவாசை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில் மார்ச் 2ஆம் தேதி பத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.

இது தொடர்பான 18 வினாடிக் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

மாலை வேளையில், ஸ்டீவன்ஸ் ரோடு வெளிவழிக்குப் பிறகு ஏற்பட்ட விபத்தில் ஒன்பது கார்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டதாகக் கூறப்பட்டது. இவ்விபத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. 59 வயதான கார் ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்த 59 வயதுப் பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்