‘ஓ நிலை’ தேர்வு எழுதாமல் பட்டயச் சான்றிதழ் பெற உதவும் திட்டங்கள்

‘ஓ நிலை’ தேர்வு எழுதாமல் பட்டயச் சான்றிதழ் பெற உதவும் திட்டங்கள்

2 mins read
3460b932-7dcd-4ad7-a9ff-bee4ad99c4be
அறிவியல், தொழில்நுட்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகள் தொடர்பான 21 பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயில்வர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜிசிஇ சாதாரண நிலை (ஓ நிலை) தேர்வு எழுதாமல் நேரடியாகப் பலதுறைத் தொழிற்கல்லூரி வழங்கும் பட்டயச் சான்றிதழைப் பெற இரு ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வகை செய்கின்றன.

அவற்றில் ஒன்று, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் அறிவியல், தொழில்நுட்பப் பள்ளியும் இணைந்து வழங்கும் பட்டயச் சான்றிதழ் பாடத்திட்டமாகும்.

மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகள் தொடர்பான 21 பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ச்தெடுத்துப் பயில்வர்.

அவற்றில் உயிர்மருத்துவ அறிவியல், பொறியியல் அறிவியல், இணையப் பாதுகாப்பு, மின்னிலக்கத் தடயவியல் ஆகிய பட்டச் சான்றிதழ் பாடத்திட்டங்களும் அடங்கும்.

இந்தப் பாடத்திட்டங்கள் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தொடங்கும்.

தன்னாட்சிப் பள்ளியான அறிவியல், தொழில்நுட்பப் பள்ளியின் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், அழகியல் ஆகிய பாடங்கள் தொடர்பில் பயன்பாட்டு அணுகுமுறையில் கவனம் செலுத்தும் நான்கு ஆண்டுகள் ‘ஓ நிலை’ பாடங்களைப் பயில்வர்.

அறிவியல், தொழில்நுட்பப் பள்ளி, நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டம் வாயிலாகவும் மாணவர்களை ஏற்கிறது.

இதே போன்று ‘ஓ நிலை’ எழுதாமல் நேரடியாகப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் வாய்ப்பை சிங்கப்பூர் விளையாட்டுத்துறை பள்ளியும் வழங்குகிறது.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தகத்துறை பட்டயச் சான்றிதழ் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயிலலாம். அல்லது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி வர்த்தகக் கல்வி (தொழில்முனைவர் நிர்வாகத் தெரிவு) பட்டயச் சான்றிதழ் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயிலலாம்.

அனைத்துலக ‘பெக்கலரேட்’ பட்டயச் சான்றிதழ் பாடத்திட்டத்தையும் சிங்கப்பூர் விளையாட்டுத்துறை பள்ளி வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்