ஈசூன் வட்டாரத்தில் புதிய சென்சாரு பகுதியில் 10,000 வீடுகள்

1 mins read
79ae18d9-7e94-4ba4-b648-cf154fce31e0
சென்சாரு வட்டாரத்தில் கட்டப்படும் 1,200 வீவக வீடுகள் ஜூன் மாதம் விற்பனைக்கு விடப்படும். - படம்: சாவ்பாவ்

ஈசூன் வட்டாரத்தில் புதிதாக அமைக்கப்படும் சென்சாரு குடியிருப்புப் பகுதியில் ஏறத்தாழ 10,000 வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்சாரு வட்டாரம் காத்திப் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது.

அங்கு கட்டப்படும் வீடுகளில் குறைந்தபட்சம் 80 விழுக்காடு வீடுகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளாகும்.

தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகள் (பிடிஓ) திட்டத்தின்கீழ் கட்டப்படும் 1,200 வீடுகள் ஜூன் மாதம் விற்பனைக்கு விடப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் தெரிவித்துள்ளன.

ஈரறை வீடுகளிலிருந்து ஐந்தறை வீடுகள் வரை விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்சாரு வட்டாரத்தில் அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல வீடுகள் கட்டப்படும்.

சென்சாரு வட்டாரத்தைப் புதிய குடியிருப்புப் பகுதியாக நகர மறுசீரமைப்பு ஆணையம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அடையாளம் கண்டது.

சென்சாரு வட்டாரக் குடியிருப்பாளர்களுக்காகப் புதிய பொழுதுபோக்கு, சமூக, வர்த்தக வசதிகள் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்