சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்த $165 மி. பெருவிளையாட்டு நிகழ்வு நிதி

சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்த $165 மி. பெருவிளையாட்டு நிகழ்வு நிதி

2 mins read
dd4a32a8-0348-495f-83d3-2042e59bc6fb
கடந்த 2019ஆம் ஆண்டு அனைத்துலக வெற்றியாளர் கிண்ண காற்பந்து போட்டி தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. - படம்: சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்

உலகின் முன்னணி பாடகி டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரில் பலத்த வரவேற்பு நிலவி வரும் நிலையில் பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்த வாய்ப்புள்ள நாடாக குடியரசின் நிலையை வலுப்படுத்தவும் அதற்கான முயற்சிகளை வேகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிடுகிறது.

பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான முதன்மை மையமாக சிங்கப்பூரை மேம்படுத்த $165 மில்லியன் பெருவிளைநாட்டு நிகழ்வு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றதில் வியாழக்கிழமை (மார்ச் 7) தமது அமைச்சின் செலவின ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் இதனை அறிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்று நடத்துவதன் மூலம் சிங்கப்பூரின் திடல்தட விளையாட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிட்டும். உலகின் சிறந்த விளையாட்டாளர்களோடு போட்டியிடும் திறனை இங்குள்ள விளையாட்டார்கள் சிங்கப்பூரிலேயே சோதித்துக்கொள்ள வாய்ப்புகள் அவை.

“உலகின் சிறந்த திடல்தட வீரர்கள் அதிமானோர் இங்கு விளையாடுவதைக் காணும் வாய்ப்பு சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கும். அதன் மூலம் பொருளியல் வளர்வதோடு உலகின் அங்கீகாரம் சிங்கப்பூருக்குக் கிட்டும்.

“பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்று நடத்துவதில் சிங்கப்பூரிடம் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர வாய்ப்பு கிடைக்கும்.

“அதேநேரம், தரமிக்க அனைத்துலக நிகழ்வுகளை நடத்துவதற்கான இடம் சிங்கப்பூர் என்னும் நற்பெயர் வலுவடையும்,” என்றார் திரு எட்வின்.

2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்வேறு அனைத்துலக நிகழ்வுகளை நடத்திது.

ஒலிம்பிக் விளையாட்டு வாரம், தொழில்முறை முத்தரப்பு திடல்தட அமைப்பின் ஆசிய பொதுவிருதுப் போட்டி, ஃபிபா 3x3 ஆசிய கிண்ணப் போட்டி, உலக மேசைப் பந்து சிங்கப்பூர் ஸ்மாஷ், எச்எஸ்பிசி சிங்கப்பூர் ரக்பி செவன்ஸ், ஃபார்முலா ஒன் சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார்ப் பந்தயம் ஆகியன அந்த நிகழ்வுகள்.

குறிப்புச் சொற்கள்