அங் மோ கியோவில் ஐந்தறை வீவக வீடு $1.268 மில்லியனுக்கு விற்பனை

அங் மோ கியோவில் உள்ள ஐந்தறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்று $1.268 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் சாதனை அளவு விலைக்கு விற்கப்பட்ட வீவக வீடு இதுவே.

புளோக் 588சி அங் மோ கியோ ஸ்திரீட் 52ல் 13வது மாடிக்கும் 15வது மாடிக்கும் இடைப்பட்ட அந்த வீடு, பிப்ரவரியில் மறுவிற்பனையானது.

மொத்தம் 1,292 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டில் 86 ஆண்டுகள் குத்தகைக்காலம் எஞ்சியுள்ளது.

அந்த புளோக் வடிவமைத்து, கட்டி, விற்கும் திட்டத்தைச் சேர்ந்தது.

அறுபதுகளில் உள்ள தம்பதியர் அந்த வீட்டை விற்றதாக சீன நாளிதழான ஷின் மின் தெரிவித்தது.

தனிக்குடித்தனம் தொடங்க தங்கள் பிள்ளைகள் வீடு வாங்கி மாறிவிட்டதால் தங்களுக்கு இவ்வளவு பெரிய வீடு தேவையில்லை என அத்தம்பதியர் கூறினர். எனவேதான் அந்த வீட்டை விற்று சிறிய வீடு வாங்க அவர்கள் முடிவெடுத்தனர்.

அந்த வீட்டை வாங்கியவர்கள் நால்வர் அடங்கிய குடும்பத்தார்.

ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி, ஆன்டர்சன் உயர்நிலைப்பள்ளி, நன்யாங் பலதுறைத்தொழிற்கல்லூரிக்கு அருகே அந்த வீடு அமைந்துள்ளது.

அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்துக்கு நடந்துசெல்லும் தூரத்தில் அது உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!