பணமோசடிக்கு உடந்தை: நால்வர்மீது குற்றச்சாட்டு

பண மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர்மீது வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

‘சிங்பாஸ்’ கணக்கு,வங்கி கணக்கு உள்ளிட்ட தனிநபர் விவரங்களை மோசடிக்காரர்களுக்கு விற்றதாக அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பல்வேறு மோசடிகள் மூலம் ஈட்டிய கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற மோசடிக்காரர்கள் அவர்களின் விவரங்களைப் பயன்படுத்திக் கொண்டதாக வியாழக்கிழமையன்று (மார்ச் 7) காவல்துறை தெரிவித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் 21 வயதான ஹான்ஸ் இல்ஹான் மஹ்ரூன் தனக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவருக்குத் தனது வங்கி விவரங்களை $1,300க்கு விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.

‘டெலிகிராம்’ எனும் தகவல் செயலியில் வெளியான விளம்பரத்தில் பகிரப்பட்ட தகவல்களுக்கேற்ப அவர் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு மே மாதத்தில் 19 வயதான மத்தியாஸ் சூன் ஜியா லே, மோசடிக்காரர்களுக்கு வழங்குவதற்காகவே மூன்று வங்கி கணக்குகளைத் தொடங்கி அதன் விவரங்களை $2,300க்கு விற்றதாக கூறப்பட்டது.

இவரும் டெலிகிராமில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து இச்செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மூன்று மோசடி குற்றச்சாட்டுகளையும் தவறான கணினிப் பயன்பாட்டுச்  சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டையும் லே எதிர்கொள்வார்.

மற்ற இரு சந்தேக நபர்களும் 17 வயதுக்குட்டபட்டவர்கள் என்பதால் அவர்களின் விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.

அவர்களில் ஒருவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன் ‘சிங்பாஸ்’ கணக்கு விவரங்களை அறிமுகம் இல்லாத நபரிடம் பகிர்ந்துகொண்டதாகவும் அதற்காக அவருக்கு $3,000 பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த விவரங்களைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

மற்றொருவர் தன் வங்கி கணக்கு விவரங்களை வேறு நபருக்கு $600க்கு விற்றதாக தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!