தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பினாங்கின் புகழ்பெற்ற கீ ஹியாங் பிஸ்கெட்டுகள் இனி சிங்கப்பூரிலும் கிடைக்கும்

1 mins read
bd755254-fdba-41f8-8749-3d38dce39253
பினாங்கின் புகழ்பெற்ற கீ ஹியாங் பாரம்பரிய பிஸ்கெட்டுகள் கைகளால் தயாரிக்கப்படுபவை. 15 நாள்களுக்கு ஒருமுறை அவை சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. - படம்: கீ ஹியாங்

மலேசியாவின் பினாங்கிலுள்ள ‘கீ ஹியாங் பேக்கரி’ தயாரிக்கும் ‘தாவ் சார் பியா’ எனும் பாசிப் பயறு பிஸ்கெட்டுகள் மிகவும் புகழ்பெற்றவை.

மார்ச் 24ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரிலேயே அவற்றை வாங்க இயலும்.

‘பினாங்கு கல்ச்சர்’ எனும் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவகத்தில் அந்த பிஸ்கெட்டுகள் விற்கப்படும்.

1856ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘கீ ஹியாங்’, பினாங்கில் செயல்படும் ஆகப் பழைமையான, ஆகப் புகழ்பெற்ற ‘தாவ் சார் பியா’ தயாரிப்பு நிறுவனமாகக் கருதப்படுகிறது.

பிஸ்கெட் தயாரிப்புக்கு அது இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை.

‘ஜெம்’ கடைத்தொகுதி, விவோசிட்டி, நெக்ஸ், சாங்கி விமான நிலைய முனையம் 1, காம்பஸ் ஒன் ஆகியவற்றில் அமைந்திருக்கும் ‘பினாங்கு கல்ச்சர்’ உணவகங்களில் ‘கீ ஹியாங்’ தயாரிப்புகள் நான்கை வாங்க முடியும். 15 நாள்களுக்கு ஒருமுறை கைகளால் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகள் சிங்கப்பூருக்கு விமானம் மூலம் தருவிக்கப்படும்.

மலேசியாவில் வாங்குவதைவிட சிங்கப்பூரில் அவற்றின் விலை சற்று அதிகமாக இருக்கும். ‘கீ ஹியாங்’ தயாரிக்கும் உடனடி காப்பித்தூளும் சிங்கப்பூரில் விற்பனையாகும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்