உடைந்த குழாய்; அப்பர் தாம்சன் ரோட்டில் ஒரு தடம் மூடல்

1 mins read
83d1f880-936c-42d7-8392-778a32964574
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நிகழ்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) மாலை அப்பர் தாம்சன் ரோட்டில் குழாய் ஒன்று உடைந்ததைத் தொடர்ந்து நீர் கிட்டத்தட்ட ஐந்து மீட்டர் உயரத்துக்குப் பீய்ச்சியடிக்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பர் தாம்சன் ரோடு - சின் மிங் அவென்யு சந்திப்பில் நிகழ்ந்தது. செவ்வாய்க்கிழமை மாலை சுமார் ஏழு மணிக்கு இதுகுறித்து தங்களுக்குத் தகவல் வந்ததாக பொதுப் பயனீட்டுக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் தங்களின் பணியாளர்கள் பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கழகம் குறிப்பிட்டது.

பழுதுபார்ப்புப் பணிகளை சீராக மேற்கொள்ள லார்னி ரோட்டை நோக்கிச் செல்லும் அப்பர் தாம்சன் ரோடு பகுதியில் இடது தடம் மூடப்பட்டதாக கழகம் தெரிவித்தது. பின்னர் உடைந்த குழாயிலிருந்து நீர் பீய்ச்சப்பட்டது நின்றுபோனதை செவ்வாய்க்கிழமை இரவு 8.05 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது.

இச்சம்பவத்தால் சாலைப் போக்குவரத்தில் பெரிய அளவில் இடையூறு ஏதும் ஏற்படவில்லை. குழாய் உடைந்ததற்கான காரணத்தை அறிய பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்