மனிதவள அமைச்சு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சம்பள இடைவெளி குறைந்தது

பெண்களுக்குக் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டுள்ளது.

இருந்தாலும் இன்னமும் பெண்கள், ஆண்களைவிடக் குறைவாகச் சம்பளம் ஈட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஆண்களைவிடப் பெண்கள் சராசரியாக 14.3 விழுக்காடு குறைவாக சம்பாதித்தனர் என்று மனிதவள அமைச்சின் ஆக அண்மைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அந்த விகிதம், 2018ஆம் ஆண்டு பதிவான 16.3 விழுக்காட்டைவிடக் குறைவு.

25லிருந்து 54 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரைக் கொண்டு மனிதவள அமைச்சு ஆய்வு நடத்தியது.

சிங்கப்பூரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள சம்பள இடைவெளி, பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பைச் (ஓஇசிடி) சேர்ந்த நாடுகளில் காணப்பட்டதைவிட சற்று மோசமாக உள்ளது. அதேவேளை, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூர் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆண்களும் பெண்களும் பார்க்கும் வேலைகள் மாறுபட்டதே சென்ற ஆண்டு அவர்களுக்கிடையிலான சம்பள இடைவெளிக்கு முக்கியக் காரணம் என்று மனிதவள அமைச்சு கூறியது. உதாரணமாக, கூடுதல் சம்பளம் கிடைக்கும் பொறுப்புகளை அதிக ஆண்கள் வகிப்பது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனினும், 2018லிருந்து சென்ற ஆண்டு வரை ஆண்களைவிட பெண்களுக்கிடையே வேலை நிலவரம் மேம்பட்டதென்று இம்மாதம் நான்காம் தேதியன்று மனிதவள அமைச்சு அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட தகவல் வரைபடத்தின் (இன்ஃபோகிராஃபிக்) மூலம் குறிப்பிட்டது.

சென்ற ஆண்டு 75 விழுக்காட்டுப் பெண்கள் நிபுணத்துவ, நிர்வாக, தொழில்நுட்பப் (பிஎம்இடி) பொறுப்புகளை வகித்தனர். இந்த விகிதம், 2018ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் 8.8 விழுக்காடு அதிகம்.

அதே காலகட்டத்தில் நிபுணத்துவ, நிர்வாக, தொழில்நுட்பப் பொறுப்புகளை வகித்த ஆண்களின் விகிதம் 6.3 விழுக்காடு மட்டுமே கூடி 79.4 விழுக்காடாகப் பதிவானது.

வெவ்வேறு துறைகள், வேலை நேரம் ஆகியவற்றில் இருக்கும் வித்தியாசமும் ஆண்கள், பெண்களுக்கிடையே உள்ள சம்பள இடைவெளிக்கான காரணங்களில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!