டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சி டிக்கெட் விற்பனையில் மோசடி நிகழ்ந்தது

அப்பாவி பயனீட்டாளர்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் விதிமுறைகளை மாற்ற வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் கெரோசல் என்ற இணைய வழி வர்த்தக நிறுவனத்தின் தலைமை அதிகாரி திருவாட்டி டான் சு லின். பாப் இசைப் பாடகி டெய்லர் சுவிஃப்டின் இசை நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ‘கிளாசிஃபைட்ஸ்’ செயலி வழியிலான டிக்கெட் விற்பனையை நிறுத்த முடிவெடுத்தபின் திருவாட்டி டான் அது பற்றி விளக்கமளித்தார்.

இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்க விழைவோர் அதை விற்பதாகக் கூறுபவர்களை நம்பலாமா என்பதைக் கண்டறியவில்லை என்று திருவாட்டி டான் கூறினார். வெளிநாடுகளிலிருந்து டிக்கெட் வாங்க பலர் முன்வந்தது, குறைவான டிக்கெட்டுகளே இருந்தது ஆகியவை மோசடிக்காரர்கள் வலையில் பலர் எளிதில் சிக்க உதவியது என்று அவர் தெரிவித்தார்.

“டெய்லர் சுவிஃப்டின் இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே காணப்படும் பேரார்வம் ஒன்றே போதும் அவை தனிச்சிறப்பு வாய்ந்தவையாக திகழ்வதற்கு.

“பல்வேறு சூழல்கள் கடைசி இரண்டு வாரத்தில் இந்தக் கடுமையான முடிவெடுக்கத் தூண்டின. பலர் தாங்கள் போற்றிப் புகழும் பாடகியின் இசை நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என முண்டியடித்துக் கொண்டு இருந்தனர், ” என்று திருவாட்டி டான் சொன்னார்.

கூகலின் ஆசிய-பசிபிக் இணையப் பாதுகாப்பு தொடக்க மாநாட்டில் கூகல், மெட்டா நிறுவனத் தளங்களில் சந்தித்த மோசடிகள் தொடர்பில் அந்த நிறுவன நிர்வாகிகளுடன் குழு விவாதங்களில் திருவாட்டி டான் பங்கேற்றார். அதில் மேற்கண்டவாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய திருவாட்டி டான், பயனீட்டாளர்கள் தாங்கள் விரும்புவதை அவர்களுக்கு விரும்பும் விலையில் வாங்குவதை கெரோசல் தனது வழக்கமான கொள்கையாகக் கொண்டுள்ளது.

“இது ஒரு சர்ச்சையான முடிவு. காலத்தின் கட்டாயம், பல்வேறு சூழ்நிலைகள் ஆகியவை ஒன்றுகூடி எங்களை நாங்கள் கொண்டுள்ள கொள்கையிலிருந்து மாற வைத்தது,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!