மூன்று வாகன விபத்து; தலைகீழான கார், ஒருவர் மருத்துவமனையில்

மூன்று வாகன விபத்து; தலைகீழான கார், ஒருவர் மருத்துவமனையில்

1 mins read
b6a739e0-55a8-4bb2-bed1-c292aafd0ada
வெள்ளிக்கிழமையன்று உட்லண்ட்சில் நிகழ்ந்த விபத்து. - படம்: ‌ஷின் மின் நாளேடு

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதையடுத்து ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் உட்லண்ட்ஸ் அவென்யு 1-அவென்யு 2 சந்திப்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) நிகழ்ந்தது. நண்பகல் 12 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையினர் தெரிவித்தனர்.

24 வயது பயணி ஒருவர் நினைவுடன் இருந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது. அந்த ஆடவர் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செலல்ப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

லேசான காயங்கள் ஏற்பட்ட வேறு இருவர் சோதிக்கப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்பப் படை சொன்னது. அவ்விருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்