மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் சீனாவுக்குப் பயணம்

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் சீனாவுக்குப் பயணம்

1 mins read
b68a5f61-36a9-403b-af9e-3990a3e4c9d3
2019க்குப் பிறகு அமைச்சர் டியோவின் முதல் சீனப் பயணமாக இது அமைகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) வரை சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். சீச்சுவான், ஸிஜியாங், பெய்ஜிங் ஆகிய பகுதிகளுக்கு அவர் செல்லவுள்ளார்.

தென்மேற்கு மாநிலமான சீச்சுவானிலும் கிழக்குக் கரையோர மாநிலமான ஸிஜியாங்கிலும் உள்ளூர் தலைவர்களை திரு டியோ சந்திப்பார். தலைநகர் பெய்ஜிங்கில் மூத்த சீனத் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்று வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சீச்சுவானில் சிங்கப்பூர்-சீச்சுவான் உயர் தொழில்நுட்ப புத்தாக்க பூங்காவுக்கும் ஸிஜியாங்கில் சிங்கப்பூர்-ஹாங்ஸோவ் அறிவியல், தொழில்நுட்ப பூங்காவுக்கு திரு டியோ செல்வார். இரு பூங்காக்களும் சிங்கப்பூர், சீன நிறுவனங்களால் அமைக்கப்பட்டன.

2019க்குப் பிறகு திரு டியோவின் முதல் சீனப் பயணமாக இது அமைகிறது.

குறிப்புச் சொற்கள்