தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எக்ஸ்போ ரயில் நிலையம்: கடற்படைக் கருப்பொருளில் அலங்காரம்

1 mins read
01f8c6ef-cca8-4fd1-8d1a-9e6cef542420
சிங்கப்பூரின் கடல்துறை மரபுடைமை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் எக்ஸ்போ ரயில் நிலையம் 2024 மார்ச் 15ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு கடற்படைக் கருப்பொருளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

டௌன்டவுன் ரயில் பாதையில், பயணிகள் சிங்கப்பூரின் கடல்துறைத் தற்காப்பு குறித்து அறிந்துகொள்ள உதவும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எக்ஸ்போ ரயில் நிலையம் கடற்படைக் கருப்பொருளில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலின் முப்பரிமாண மாதிரியும் அலங்காரத்தில் அடங்கும்.

அந்நிலையத்தில், பயணிகள் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி ‘ஏஆர்’ எனப்படும் மிகைமெய் தொழில்நுட்ப அனுபவத்தைப் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணியில் ஈடுபட்டிருக்கும் நீர்மூழ்கிக் கப்பல், முக்குளிப்பாளர்கள் போன்ற பின்னணிகளை இன்ஸ்டகிராமில் அமைத்துக்கொள்ள அந்த கியூஆர் குறியீடுகள் உதவும்.

டௌன்டவுன் பாதையில் சேவை வழங்கும் ரயில்கள் மூன்றில், இத்தகைய கியூஆர் குறியீடுகள் இடம்பெறுகின்றன. சிங்கப்பூர் கடற்படை அரும்பொருளகம் குறித்த தகவல்களைப் பயணிகள் அறிந்துகொள்ள அவை கைகொடுக்கும். எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் கடற்படை அரும்பொருளகம், சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டர் ஆகியவற்றை நடத்தும் ‘டிஃபன்ஸ் கலெக்டிவ் சிங்கப்பூர் (டிசிஎஸ்) அமைப்பும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

சிங்கப்பூரின் கடல்துறை மரபுடைமை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் எக்ஸ்போ ரயில் நிலையம் 2024 மார்ச் 15 முதல் ஓராண்டுக்கு கடற்படைக் கருப்பொருளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பயணிகளுக்கு தனித்துவமிக்க கற்றல், பயண அனுபவத்தை மூன்றாண்டுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வுக் குறிப்பில் எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் டிசிஎஸ்சும் கையெழுத்திட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்