அதிகமானோர் வசிக்கும் சிறிய இடங்களில் அணுசக்திப் பயன்பாடு குறித்து சிங்கப்பூர் ஆய்வு

சிங்கப்பூர் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அணுவாற்றல் பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறது.

அதேநேரம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, துறைசார்ந்த வல்லுநர்களிடமிருந்து கற்கும் நோக்கில், அரசாங்க அமைப்புகளின் குழுக்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள அணுசக்திப் பங்காளித்துவ அமைப்புகளுக்குச் சென்றுவந்துள்ளன.

அணுவாற்றல் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் போன்ற சிறிய, அதிகமானோர் வசிக்கும் நாடுகளில் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சிங்கப்பூர் ஆய்வுசெய்துவருவதாக எரிசக்திச் சந்தை ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

அணுவாற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த ஆழமான புரிதலுக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் அனைத்துலக அமைப்புகள், பங்காளிகளுடன் இணைந்து சிங்கப்பூர் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அணுவாற்றல் பாதுகாப்பு, நெருக்கடிநேரத் தயார்நிலை, விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் அவற்றைக் கையாளுதல் ஆகியவற்றுக்கான நிலையங்களை இந்த வட்டாரத்தில் அமைப்பது குறித்து அண்டை நாடுகளுடன் இணைந்து அது பணியாற்றுவதாகவும் ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் தற்போதைய மின்சாரத் தேவையில் 95 விழுக்காடு, இயற்கை வாயுவிலிருந்து கிடைக்கிறது. இதனால் ஏற்படும் கரிம வெளியேற்றம் நாட்டின் ஒட்டுமொத்தக் கரிம வெளியேற்றத்தில் 40 விழுக்காடு ஆகும். எனவே, குறைவான கரிமத்தை வெளியேற்றும் மாற்றுவழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிங்கப்பூர் கவனம் செலுத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!