ஆபாச செய்திகளை அனுப்பிய என்டியு விஞ்ஞானி

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் அறிஞராகப் பணியாற்றிய ஜேசன் ஸ்காட் ஹெரின், 49, 12 வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலியல் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு இந்தோனீசிய கைப்பேசிக்கு தகவல் அனுப்பி சிக்கியிருக்கிறார்.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் அவரது கைபேசியை அதிகாரிகள் கைப்பற்றியபோது அதில் குழந்தைகள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படும் 31 ஆபாச காணொளிகளும் 90 புகைப்படங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்கரான ஹெரின் திங்கட்கிழமை (மார்ச் 18) தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார். பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சேவைக்கு ஏற்பாடு செய்யுமாறு மற்றொருவருக்கு செய்தி அனுப்பியது அவர் மீதான குற்றச்சாட்டுகளாகும்.

இதர இரண்டு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

குற்றச்செயல் புரிந்தபோது அவர் எரிமலை மற்றும் பூமி மீது மோதும் விண்கற்கள் தொடர்பான ஆய்வாளராக இருந்ததாக சிங்கப்பூர் பூமி கண்காணிப்பகம் குறிப்பிட்டது.

ஹெரின் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் வளாகத்தில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் என்டியு தெரிவித்தது.

2019 நவம்பர் 14ஆம் தேதி ஹெரின் சிங்கப்பூரில் இருந்தபோது இந்தோனீசிய கைபேசி ஒன்றுக்கு வாட்ஸ்அப் தகவல் அனுப்பியதாக மார்ச் 18ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பன்னிரண்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடனான பாலியல் சேவைக்கு பணம் தருவதாக அவர் அந்தச் செய்தியில் கூறியதாக சொல்லப்பட்டது.

ஹெரின் பாலியல் உறவுக்கு நான்கு மில்லியன் ருப்யாவும் (S$340), பாலியல் செயல்களுக்கு இரண்டு மில்லியன் ருப்யாவும் வழங்குவதாக அவர் தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது.

அவர் மீதான வழக்கு மே 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு அவருக்கு தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!