சிங்கப்பூரின் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநர்: 3வது ஆண்டு போட்டி

2 mins read
01d3ecd1-8c4c-4a99-bbf4-fa9fe9b05471
சிங்கப்பூரின் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆய்வு, உணவு, வீட்டுப் பொருள்கள், அழகு மற்றும் ஆரோக்கிய சேவைகள், போக்குவரத்து மற்றும் பயணம், மின்னிலக்க தயாரிப்புகள் என கிட்டத்தட்ட 100 சில்லறை விற்பனைப் பிரிவுகளை உள்ளடக்கியது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பயனீட்டாளர்கள் இணைய மதிப்பீடுகளிலும் இணைய விற்பனைகளையும் அதிகம் சார்ந்திருப்பதால், சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநர்களுக்கான தேடல் மீண்டும் இடம்பெறுகிறது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சும் ஜெர்மனியை சார்ந்த நிறுவனமான ஸ்டேடிஸ்டாவும் முன்மாதிரியான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நிறுவனங்களை அடையாளம் காணும் கருத்தாய்வை மூன்றாவது ஆண்டாக நடத்துகிறது. str.sg/cust2425 என்ற ஆய்வுக்கு மார்ச் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூரின் சிறந்த வாடிக்கையாளர் சேவை 2024 / 2025 ஆய்வு, உணவு, வீட்டுப் பொருள்கள், அழகு மற்றும் ஆரோக்கிய சேவைகள், போக்குவரத்து மற்றும் பயணம், மின்னிலக்கத் தயாரிப்புகள் என கிட்டத்தட்ட 100 சில்லறை விற்பனைப் பிரிவுகளை உள்ளடக்கியது.

இந்த ஆய்வில் இவ்வாண்டு சாதாரண உணவருந்தும் உணவகங்கள் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் தகுதி பெற, நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அவற்றின் தயாரிப்புகளை வாங்கிய, சேவைகளைப் பயன்படுத்திய அல்லது அவை குறித்த தகவல்களை ஆய்வு செய்த வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டேடிஸ்டாவின் 2023 உலகளாவிய பயனீட்டாளர் கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூரில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பயனீட்டாளர் சில இணைய ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். பொருள்களை வாங்குவதற்கு முன்பு, மற்ற பயனீட்டாளர்களின் கருத்துகளைப் பார்க்கிறார்கள்.

சிங்கப்பூர் பயனீட்டாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவாக தங்கள் கைப்பேசி அல்லது டேப்லெட் வழியாக முக்கிய புதிய பொருட்களை வாங்குகிறார்கள் என்றும் ஸ்டேடிஸ்டா ஆய்வு காட்டுகிறது. மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அதைப் பார்க்கவும் தொடவும் விரும்புகிறார்கள்.

2023 / 2024 ஆய்வில், ஹோட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதனதன் பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்தன. முதல் 10 இடங்களில் ஹோட்டல் நிறுவனங்கள் பாதியைப் பிடித்தன. ஷங்ரிலா சிங்கப்பூர் 1,800க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வென்று முதலிடம் பெற்றது. இந்த ஆய்வு தொடங்கப்பட்ட 2022 / 2023ல் 1,600 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வென்று உள்ளூர் ஆடியோ நிறுவனம் டிசி அக்குஸ்டிக் முதலிடத்தைப் பிடித்தது.

குறிப்புச் சொற்கள்