சிங்கப்பூரில் உள்ள முதன்மையான நான்கு வனவிலங்குப் பூங்காக்களில் 2023ஆம் ஆண்டில் 970 விலங்குகள் பிறந்தன.
2013ஆம் ஆண்டுக்குப் பிறகு பறவைப் பூங்கா, நைட் சஃபாரி, ரிவர் வொண்டர்ஸ், விலங்கியல் தோட்டம் ஆகியவற்றில் பிறந்த விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இதுவே ஆக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு வனவிலங்குப் பூங்காக்களிலும் 128 வகை விலங்குகள் குட்டி போட்டன அல்லது குஞ்சு பொரித்தன என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் மார்ச் 20ல் தெரிவித்தது.
குட்டி போட்ட, குஞ்சு பொரித்த விலங்கு வகைகளில் 29, அருகிவரும் விலங்கு வகைகளைச் சேர்ந்தவை.


