ஜப்பானிய முன்னாள் பிரதமர் அபே கொலை குறித்துக் கருத்துரைத்த ஆடவருக்குச் சிறை

ஜப்பானிய முன்னாள் பிரதமர் அபே கொலை குறித்துக் கருத்துரைத்த ஆடவருக்குச் சிறை

1 mins read
பிரதமர் லீக்கும் ‘அதையே செய்ய’ ஃபேஸ்புக்கில் அழைப்புவிடுத்தார்
aec2b3e3-2e74-4648-9d14-cadbed562394
கோங் சீ கியான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் வெளியான செய்தியறிக்கையில், “தயவுசெய்து நமது பிரதமருக்கும் அதையே செய்யுங்கள்,” என்று பதிவிட்டார் 46 வயது ஆடவர் ஒருவர்.

பிரதமர் லீ சியன் லூங் குறித்து அவ்வாறு பதிவிட்ட கோங் சீ கியானுக்கு மார்ச் 20ஆம் தேதி நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மின்னியல்முறையில் வன்முறையைத் தூண்டியது தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அவ்வாறு பதிவிட்ட கோங், சிங்கப்பூர் அரசாங்கத்தையும் பிரதமர் லீ அதற்குத் தலைமைதாங்குவதும் தனக்குப் பிடிக்கவில்லை என்று விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்