அரசதந்திர பயணப் பெட்டி சலுகையை தவறாகப் பயன்படுத்திய அதிகாரி

வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் ஒருவர், பெனடால் பெட்டிகள், சொகுசு கைக்கடிகாரங்களுக்கு அரசதந்திர பயணப் பெட்டி சலுகையை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள உள்ளார்.

அது தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (மார்ச் 21) அன்று மறுவிசாரணைக்கு வந்தபோது, 45 வயதான கில்பர்ட் ஓ ஹின் குவான் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாகக் கூறினார்.

வெளியுறவு அமைச்சை ஏமாற்றியது, ஏமாற்று வேலைக்குத் துணைபோனது, அரசு ஊழியருக்கு பொய்யான தகவல்களை வழங்கியது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.

2022 டிசம்பரில் சிங்கப்பூலிருந்து பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்ட பெனடால் மருந்து அடங்கிய பெட்டி, அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்கானது என்பதை அவர் அமைச்சிடமிருந்து மறைத்ததாகக் கூறப்படுகிறது.

பிரபலமான முத்திரைச் சின்னங்கள் கொண்ட கைக்கடிகாரங்களை 2023 ஜனவரியில் சீனாவிலிருந்து அரசந்திர பயணப் பெட்டி சேவை வழியாக சிங்கப்பூருக்கு அனுப்ப அமைச்சின் சக ஊழியரைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே மாதத்தில், மேற்குறிப்பிட்ட பயணப்பெட்டியிலிருந்த கடிகாரங்கள் தனது தந்தைக்குச் சொந்தமானவை என்று அவர் அமைச்சின் துணைச் செயலாளர் ஒருவரிடம் பொய் கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஓ தோக்கியோவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய அவரின் குற்ற ஒப்புதல் ஏப்ரல் 26ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

அவர் நாட்டை விட்டு வெளியேற கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அரசதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின்படி, அதிகாரத்துவப் பயன்பாட்டிற்கான ஆவணங்கள் அல்லது பொருட்களை அனுப்ப அரசதந்திர பயணப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அரசதந்திர பயணப் பொதிகளைத் திறக்கவோ அல்லது தடுத்து வைக்கவோ முடியாது. பெட்டிகளின் வெளிப்புறத்தில் அவை குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஏமாற்றுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓ-வுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அரசாங்க ஊழியரிடம் பொய் கூறியது தொடர்பில் அவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!