வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் ஆசிய அளவில் சிங்கப்பூர் முதலிடம்: ஆய்வு

ஆசிய வட்டாரத்தில் சென்ற ஆண்டு (2023), வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் சிங்கப்பூர் முதலிடம் வகித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மில்கென் நிலையத்தின் உலகளாவிய வாய்ப்புகள் குறியீட்டில் சென்ற ஆண்டு 130 நாடுகள் பட்டியலிடப்பட்டன. அவற்றிடையே சிங்கப்பூர், ஆசியாவில் முதலிடத்தையும் உலக அளவில் 14வது இடத்தையும் பிடித்தது.

உலக அளவில் சுவீடனைப் பின்னுக்குத் தள்ளி டென்மார்க் முதலிடத்தைப் பிடித்தது. பட்டியலில் பின்லாந்து மூன்றாமிடத்திலும் அமெரிக்கா நான்காம் இடத்திலும் உள்ளன.

2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க சென்ற ஆண்டுக்கான பட்டியலில் சிங்கப்பூர் நான்கு நிலைகள் முன்னேறியுள்ளது. வலுவான பொருளியல் வளர்ச்சி அதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

எளிதாக வர்த்தகத்தை நடத்தும் சூழல், ஒப்பந்த அமலாக்கம், சர்ச்சைக்குத் தீர்வுகாணுதல் தொடர்பான விதிமுறைக் கட்டமைப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் வலுவான நிலையில் உள்ளது.

முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களின் சொத்துப் பாதுகாப்பு தொடர்பிலும் ஒரு நாடு எந்த அளவு செயல்படுகிறது என்ற பிரிவிலும் சிங்கப்பூர் சிறந்த நிலையில் உள்ளது.

முதலீட்டாளர் உரிமைகள், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரில் முதலீட்டுச் சூழல் வலுவாக இருப்பதால் மூலதனத்தை ஈர்ப்பதில் அது சிறப்பாகச் செயல்படுவதை ஆய்வாளர்கள் சுட்டினர்.

சிங்கப்பூருக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள், 2022ஆம் ஆண்டில் 141.2 பில்லியன் அமெரிக்க டாலராகப் (S$189 பில்லியன்) புதிய உச்சத்தைத் தொட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவன அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அடுத்தபடியாக சிங்கப்பூர் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆசியான் நாடுகளில் செய்யப்படும் இத்தகைய வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் மூன்றில் இரண்டு பங்கை சிங்கப்பூர் ஈர்த்துள்ளது.

இருப்பினும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலை, சமூக அளவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற அம்சங்களில் சிங்கப்பூர் இன்னும் மேம்பட வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறினர். அதனால் வளர்ச்சிக்கான வருங்காலச் சூழல் தொடர்பில் சிங்கப்பூர் குறைவான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

வளர்ந்த நாடுகளுக்கு இடையே, பொருளியல் அடிப்படைகள் பிரிவிலும் சிங்கப்பூர் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. ஊழியரணித் திறன், மீள்திறனும் நீடித்த நிலைத்தன்மையும் மிக்க பொருளியலையும் சமூகத்தையும் உருவாக்கும் முயற்சிகள் ஆகிய அம்சங்கள் அந்தப் பிரிவில் மதிப்பிடப்படுகின்றன.

வர்த்தகக் கண்ணோட்டம், பொருளியல் அடிப்படைகள், நிதிச் சேவைகள், நிறுவனக் கட்டமைப்பு, அனைத்துலகத் தரநிலைகளும் கொள்கைகளும் எனும் ஐந்து பிரிவுகளின்கீழ் மில்கென் குறியீடு மதிப்பிடப்படுகிறது.

பட்டியலில் மலேசியா 27வது இடத்தில் உள்ளது. தாய்லாந்தும் சீனாவும் முறையே 37, 39வது நிலைகளில் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!