தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023ஐவிட இந்த ஆண்டு வெப்பம் அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வகம்

2 mins read
வெப்பநிலைப் பதிவு தொடங்கப்பட்டதிலிருந்து ஆக வெப்பமான நான்காவது ஆண்டாக 2023 விளங்குகிறது
842ba85f-3ae6-414b-a985-0374eb31388f
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு (2024) வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுவா சூ காங்கில் மார்ச் 24ஆம் தேதி வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியசாகப் பதிவானது.

இந்த ஆண்டில் இதுவரை பதிவான ஆக அதிக வெப்பநிலை இது.

மார்ச் 24ஆம் தேதி பிற்பகல் 2.41 மணிக்கு வெப்பநிலை அவ்வாறு அதிகமாகப் பதிவானதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

இதற்கு முன்னர், மார்ச் 13ஆம் தேதி செந்தோசாவில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகப் பதிவானது.

சிங்கப்பூரின் வானிலை இந்த ஆண்டு (2024) சென்ற ஆண்டைவிட அதிக வெப்பமாக இருக்கக்கூடும் என்று மார்ச் 23ஆம் தேதி வானிலை ஆய்வகம் தெரிவித்திருந்தது.

வெப்பநிலைப் பதிவு 1929ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், ஆக வெப்பமான நான்காவது ஆண்டாக 2023 விளங்குகிறது. 2023 மே 13ஆம் தேதி அங் மோ கியோவில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

மே மாதம் ஆக அதிக வெப்பம் பதிவான நாளாக அது கூறப்பட்டது. மேலும், சிங்கப்பூரில் 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பதிவான 37 டிகிரி செல்சியஸ் என்பதே ஆக அதிக வெப்பநிலையாக விளங்கிய நிலையில், 2023 மே 13ஆம் தேதியும் அதேபோல் வெப்பம் பதிவானது.

சிங்கப்பூரில் மார்ச் மாத இரண்டாம் பாதியில், அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாள்களில் 34 டிகிரி செல்சியசுக்கும் 35 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். மேகமூட்டம் குறைவான நாள்களில் அதற்குமேலும் வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

இதற்கிடையே, மலேசியாவில் வெப்பத் தாக்கத்தால் ஒருவர் மாண்டதாகவும் 27 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்