வரலாற்றுச் செழுமைமிக்க சாங்கி மரபுடைமைப் பாதை

சிங்கப்பூர் வரலாற்றில், சாங்கியைச் சுற்றி வாழ்ந்த இந்தியர்கள் சிலர் கூடி ஒரு சிறிய சன்னதியில் ஸ்ரீ ராமர் சிலை ஒன்றை வைத்து வழிபடத் தொடங்கினர்.

இந்துக்களும் பௌத்தர்களும் வணங்கும் போதி மரத்தின் அடியில் அமைந்த இந்தச் சன்னதி, 1946ஆம் ஆண்டில் சமூகத்தினராலும் பிரிட்டிஷ் ராணுவத்தினராலும் ஓர் ஆலயமாக மாற்றப்பட்டது. 78 ஆண்டுப் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராமர் ஆலயம் இன்று ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, சாங்கி வட்டாரத்தின் ஒரு கலாசாரச் சின்னமாகவும் விளங்குகிறது. 

ஸ்ரீ ராமர் ஆலயத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மூத்தத் தொண்டூழியராகப் பணிபுரியும் திரு தளபதி கே.வீ, 67, அக்கோவிலின் சிறப்பை விளக்கினார். 

“தீவின் கிழக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்தைச் சுற்றி நீர்நிலைகள் அமைந்துள்ளன. இது இந்து வழிபாட்டின் முக்கிய அம்சம்,” என்றார் அவர். 

“மேலும், இந்த ஆலயத்தைச் சுற்றியிருந்த கம்பங்களில் இந்துக்கள், நேப்பாளிகள், வடநாடுகளைச் சேர்ந்த பல குடியிருப்பாளர்கள் அதிகமாக நாடியதால், இன்றும் இந்துக்கள் மட்டுமின்றி பல இன மக்களும் ஸ்ரீ ராமர் ஆலயத்துக்கு வருகைபுரிகின்றனர்,” என்று அவர் கூறினார். 

அமைதியான கடற்கரை, சுவைமிக்க உணவு, உலகப் புகழ்பெற்ற சாங்கி விமான நிலையத்தைக் கொண்டிருக்கும் சாங்கியில் வரலாறு செறிவுமிக்க கதைகள் அடங்கியுள்ளன. சாங்கியைச் சுற்றியுள்ள வரலாற்றுத் தலங்களையும் அதன் சமூகக் கதைகளையும் ஆராயும் நோக்கமாக தேசிய மரபுடைமைக் கழகம் புதிதாக சாங்கி மரபுடைமைப் பாதை ஒன்றை அமைத்துள்ளது. 

அவ்வகையில், சாங்கி மரபுடைமைப் பாதையில் அமைந்துள்ள தலங்களுள் ஒன்றாக ஸ்ரீ ராமர் ஆலயம் திகழ்கிறது.

23 மரபுடைமைத் தலங்கள், ஆறு மரபுடைமைப் பாதை குறியீடுகளைக் கொண்ட சாங்கி மரபுடைமைப் பாதை, சாங்கி வட்டாரத்தின் கதைகளையும் அதன் பெருவளர்ச்சியையும் எடுத்துக்கூறும் அனுபவமாக பொதுமக்களுக்கு அமையும். ஜப்பானிய ஆக்கிரமிப்பு, அதனால் மக்கள் எதிர்கொண்ட சவால்கள், கம்பத்து வீடுகளின் சமூகப் பிணைப்பு ஆகியவற்றைச் சித்திரிக்கும் சாங்கி மரபுடைமைப் பாதையில் பல நூற்றாண்டுகால கலாசார, சமூக, பொருளியல், ராணுவ வரலாற்றைப் பொதுமக்கள் கண்டறியலாம். 

சாங்கி மரபுடைமைப் பாதையில் மூன்று கருப்பொருள்களுடன் கூடிய மூன்று பயணங்களைப் பொதுமக்கள் மேற்கொள்ளலாம். சிங்கப்பூர் ஆயுதப் படை படகுத்துறை முனையம், சாங்கி சிறைச்சாலை வளாகம், சாங்கி முனை கடற்கரை நடைபாதை ஆகியவற்றுடன் சாங்கி விமான நிலையமும் இந்த மரபுடைமைப் பாதையில் இடம்பெற்றுள்ளது. 

சாங்கி மரபுடைமைப் பாதையைத் தவிர, லிட்டில் இந்தியா, புக்கிட் தீமா, ஜூரோங், அங் மோ கியோ போன்ற வட்டாரங்களிலும் தேசிய மரபுடைமைக் கழகம் சிங்கப்பூர் முழுவதும்  24 மரபுடைமைப் பாதைகளை உருவாக்கியுள்ளது. 

சாங்கி மரபுடைமைப் பாதையைப் பற்றி மேல்விவரங்கள் அறிய பொதுமக்கள் https://www.roots.gov.sg/nhb/trails எனும் அதிகாரத்துவ இணையத்தளத்தை நாடலாம். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!