பல ஆண்களிடம் பாலியல் குற்றங்களைப் புரிந்த இளையர்

பல ஆண்களிடம் பாலியல் குற்றங்களைப் புரிந்த இளையர்

1 mins read
f79f21de-076b-4b8f-913d-12b3ca3b3c0f
படம்: - தமிழ் முரசு

இளையர் ஒருவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்தபோது 2016ஆம் ஆண்டில் ஒரு சிறுவனிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டார்.

அப்போது அந்த ஆடவருக்கு வயது 16. அவர் பராமரிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டதற்கான காரணம் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.

2018, 2020ஆம் ஆண்டுகளில் அவர் மேலும் நான்கு சிறுவர்களிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டார். பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவருக்கு வயது 12.

சம்பந்தப்பட்ட பராமரிப்பு இல்லம் குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து விலக்கப்பட்டன.

மேலும், 16 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பாலியல் செயல்களில் ஈடுபட்டது தொடர்பான 30 காணொளிகள் குற்றவாளியிடம் இருந்தது 2020ஆம் ஆண்டு மே மாதம் தெரியவந்தது. குறைந்தது ஓராண்டுக்கு அவர் சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்று வியாழக்கிழமையன்று (மார்ச் 28) உத்தரவிடப்பட்டது.

மூவரிடம் பாலியல் ரீதியான குற்றங்களைப் புரிந்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை குற்றவாளி ஒப்புக்கொண்டார். சிறுவர்களைக் கொண்ட ஆபாசக் காணொளிகளை வைத்திருந்ததாகச் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பளிக்கும்போது மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட மற்ற சிறுவர்கள் இருவர் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்