87 வயது தாயைத் துன்புறுத்திய மகனுக்குச் சிறை

87 வயது தாயைத் துன்புறுத்திய மகனுக்குச் சிறை

1 mins read
356a51cc-ea5f-46dc-850f-299ee312d996
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுவா கியோக் குவான் என்னும் 59 வயது ஆடவர், தனது 87 வயது தாயை அடித்தும் கிள்ளியும் துன்புறுத்தினார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 2) அவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதித்தது.

உணவங்காடியில் பகுதி நேர ஊழியராக வேலைசெய்த குவான் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தம் தாயை அடித்தார். அது தொடர்பான காணொளியும் வெளியானது. குவானின் நடவடிக்கையைக் கண்டித்து அவருக்கு எதிராகத் தனிநபர் பாதுகாப்பு ஆணை விதிக்கப்பட்டது.

இருந்தபோதும் குவான், வயதான தன் தாயைத் துன்புறுத்தினார். அதைத் தொடர்ந்து, அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

87 வயதான மூதாட்டி வயது மூப்பு காரணமாக மனநலப் பாதிப்புகளையும் எதிர்கொண்டவர் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குவான் தற்போது 10,000 வெள்ளி பிணையில் உள்ளார். அவர் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

குறிப்புச் சொற்கள்