தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

33 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூருக்கு சேவை வழங்கும் ஏர் கனடா

1 mins read
வான்கூவர்-சிங்கப்பூர் இடையே இடைநில்லா விமானச் சேவை
37253cc0-cb88-4bbb-ab89-be9322d7e65f
வான்கூவரிலிருந்து ஏர் கனடாவின் இடைநில்லா விமானம், ஏப்ரல் 4ஆம் தேதி காலை 7.36 மணிக்கு சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தது. - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

ஏர் கனடா நிறுவனம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு விமானச் சேவை வழங்கத் தொடங்கியுள்ளது.

வான்கூவர் நகருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஏப்ரல் 4ஆம் தேதி, இடைநில்லா விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூருக்கும் வான்கூவருக்கும் இடையே அத்தகைய சேவையை ஆறு மாதங்களுக்குமுன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுத்திய நிலையில் ஏர் கனடா இப்போது தொடங்கியுள்ளது.

வான்கூவரிலிருந்து ஏர் கனடா விமானம், ஏப்ரல் 4ஆம் தேதி காலை 7.36 மணிக்கு சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தது.

மறுவழியில் இங்கிருந்து வான்கூவருக்கு காலை 9.50 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.

இருவழியிலும் விமானத்தில் பயணிகள் நிறைந்திருந்ததாக ஏர் கனடா கூறியது.

கிட்டத்தட்ட 13,000 கிலோமீட்டர் தொலைவுள்ள இப்பாதை, ஏர் கனடா நிறுவனம் சேவை வழங்கும் ஆக நீளமான விமானப் பாதையாகும்.

சிங்கப்பூரிலிருந்து வான்கூவர் சென்றடைய 14 மணி 40 நிமிடங்கள் ஆகும்.

குறிப்புச் சொற்கள்