துடிப்புடன் மூப்படையும் மையங்களுக்கு 2,400 தொண்டூழியர்களை ஈர்க்க திட்டம்

துடிப்புடன் மூப்படையும் மையங்களுக்கு 2,400 தொண்டூழியர்களை ஈர்க்க திட்டம்

2 mins read
196fe6b9-853e-4aa3-870d-9a1c00499e49
எஸ்தர் துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தேசிய தொண்டூழிய திட்டத்தில் தொடங்கி வைத்தார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் புதிய திட்டம் ஒன்று 2028ஆம் ஆண்டுக்குள் 2,400 மூத்த குடிமக்களைத் தேர்வு செய்து அவர்களை தொண்டூழியர்களாக்க பயிற்சி அளிக்க உள்ளது.

இவர்கள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள துடிப்பாக மூப்படையும் மையங்களில் பயிற்சி பெறுவர்.

மூத்தோர் காப்பாளர் (த சில்வர் கார்டியன்ஸ்) என இந்தத் திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் மூத்தோர் மற்ற முதியவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் நட்பாகப் பழகுவதுடன் அவர்களுக்கு துடிப்புடன் மூப்படையும் மையங்களில் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும் உதவுவர்.

இது குறித்துப் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், இது மூத்தோரைச் சமூகத்தில் சுகாதார முறையிலும் துடிப்பாகவும் வாழ ஊக்குவிக்கும் ‘ஏஜ்வெல் எஸ்ஜி’ என்ற தேசிய திட்டத்தின் நான்காவது அம்சம் என்று விளக்கினார்.

இதில் சமுதாயத்திற்கு தன்னால் பங்களிக்க முடியும் என்று தெரியவந்தாலே ஒருவருக்கு அவரைப் பற்றிய நோக்கமும் சுயமதிப்பும் கூடும் என்று அவர் அமைச்சர் ஓங் கூறினார்.

“தொண்டூழியம் மூலம் மூத்தோர் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் வாழ்வில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தலாம். அத்துடன், அவர்களும் துடிப்புடன் நீடித்திருப்பதோடு, ஆரோக்கியமாகவும் சமுதாயத்துடன் தொடர்பிலும் இருக்கலாம்,” என்று பிரஸ்பட்டீரியன் சமூகத்தின் ‘எஸ்தர்’ துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து திரு ஓங் பேசினார்.

இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெறும் மூத்தோர் காப்பாளர்கள் ஏற்கெனவே உள்ள மூத்த தலைமுறைத் தூதர் திட்டத்திற்கு உறுதுணை புரிவர்.

எஸ்தர் துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தேசிய தொண்டூழிய திட்டத்தில் தொடங்கி வைத்தார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.
எஸ்தர் துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தேசிய தொண்டூழிய திட்டத்தில் தொடங்கி வைத்தார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்த தலைமுறைத் தூதர் திட்டத்தில் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மூத்த தொண்டூழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

“அவர்கள் முதியோரை அவர்களின் இல்லங்கள், சமுதாய வளாகங்கள் போன்ற இடங்களில் தொடர்புகொள்கின்றனர். அத்துடன், அவர்களை அரசாங்க திட்டங்களுடன் இணைக்கின்றனர்,” என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் முதியோரைக் குறிவைத்து தொடங்கப்பட்டது என்றாலும் இந்தத் திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இணையலாம்.

இந்த முதியோர் பராமரிப்புத் திட்டம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை துடிப்புடன் மூப்படையும் மையங்களுக்கு தேவைப்படும் ஆதரவைப் புரிந்துகொள்ள, அதற்கு தொண்டூழியர்கள் எவ்வாறு சிறப்பான முறையில் பங்களிக்கலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்த அறிமுகத் திட்டத்தின்படி, 12 மையங்களுக்கு 200 தொண்டூழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சமூக சமையல் வேலை, தனிமைத் துயரில் சிக்கும் அபாயத்தில் உள்ள முதியோருடன் நட்புப் பாராட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அறிமுகத் திட்டத்தின்வழி தொண்டூழியத்தின் மூலம் பலன் பெறுபவர்களைவிட தொண்டூழியம் புரிவோர் அதிகப் பலனடைந்ததாக திரு ஓங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்