சிங்கப்பூரின் நான்காவது முட்டைப் பண்ணையைத் திறப்பதில் தாமதம்

அடுத்த ஆண்டு முதல் செயல்படவிருந்த சிங்கப்பூரின் நான்காவது முட்டைப் பண்ணையைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்கான செலவு அதிகரித்துள்ளது, இயற்கைச் சூழல் தொடர்பான பாதுகாப்பில் (பையோசெக்கியூரிட்டி) இருக்கும் சவால்கள் அதற்கான காரணங்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

திறக்கப்பட்ட பிறகு100 மில்லியன் வெள்ளிச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முட்டைப் பண்ணையில் ஆண்டுதோறும் 360 மில்லியன் முட்டைகளை உருவாக்க முடியும். அதன் மூலம் சிங்கப்பூரின் முட்டைகளுக்கான தேவையில் 50 விழுக்காட்டைப் பூர்த்திசெய்யமுடியும்.

2022ஆம் ஆண்டில் அந்த விகிதம் 29 விழுக்காடாக இருந்தது.

சிங்கப்பூர், 2030ஆம் ஆண்டுக்குள் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தில் 30 விழுக்காட்டைத் தானே தயாரிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. அந்த இலக்கை அடைய புதிய முட்டைப் பண்ணைப் பெரிதும் கைகொடுக்கும்.

புதிய பண்ணை, ஐஎஸ்இ ஃபூட்ஸ் ஹோல்டிங்ஸ் (ஐஎஃப்எச்) எனும் உள்ளுர் நிறுவனத்துக்குச் சொந்தமானது. சிங்கப்பூரின் முட்டைத் தயாரிப்புக் கட்டமைப்பில் முழுமையாக ஈடுபட புதிய பண்ணை எண்ணம் கொண்டுள்ளது. அது, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும்.

புதிய முட்டைப் பண்ணை லிம் சூ காங்கில் அமைகிறது. அது திறக்கப்பட்ட பிறகு அந்த வளாகத்தில் கோழிக் குஞ்சுகள் பிறப்பதற்கான பகுதியைச் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

துவாஸ், சுங்கை தெங்கா ஆகியவற்றிலும் சம்பந்தப்பட்ட பண்ணைகளைச் செயல்படுத்தத் திட்டமுள்ளது. துவாஸ் பண்ணையில் 16லிருந்து 18 வாரங்களுக்குக் கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்படும். பிறகு வளர்ந்த கோழிகள் கருக்களைக் கொண்ட முட்டைகளை இட சுங்கை தெங்காவில் உள்ள பண்ணைக்கு மாற்றப்படும்.

அந்த முட்டைகளிலிருந்து பிறக்கும் கோழிக் குஞ்சுகள் புதிய முட்டைப் பண்ணைக்கு அனுப்பப்படும். அங்கு அவை முட்டையிடும் கோழிகளாக வளர்க்கப்படும். ஆண்டுதோறும் சுமார் ஐந்து மில்லியன் கோழிக் குஞ்சுகளைப் பிறக்கச் செய்ய ஐஎஃப்எச் எண்ணம் கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது சியூஸ் அக்ரிக்கல்ச்சர், செங் சூன் ஃபார்ம், என்&என் அக்ரிக்கல்ச்சர் ஆகிய முன்று முட்டைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!