தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையம்: உலகின் 5வது ஆக சொகுசான விமான நிலையம்

1 mins read
f2f0ebdc-ddd8-4a85-8b9b-e8da03c15949
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், உலகின் ஆக சொகுசான விமான நிலையங்களின் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ‘ஆல் கிளியர்’ பயணக் காப்பீட்டு நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், பயணிகள் விமானத்தில் ஏறுவதற்குமுன் பெறக்கூடிய சொகுசு வசதிகளைக் கருத்தில்கொண்டு விமான நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பட்டியலில், ஆஸ்திரேலியாவின் சிட்னி அனைத்துலக விமான நிலையமும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையமும் கூட்டாக ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன.

இரு விமான நிலையங்களும் ‘சொகுசு’ அம்சத்தில் 100க்கு 61 புள்ளிகளைப் பெற்றன.

துபாய் அனைத்துலக விமான நிலையம் 82 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லண்டனின் ஹீத்ரூ விமான நிலையம் 73 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் கத்தாரின் ஹமாத் அனைத்துலக விமான நிலையம் 66 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதன் தொடர்பில், உலகெங்கும் உள்ள 1,800க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்