உத்திபூர்வப் பங்காளித்துவத்தை நோக்கி சிங்கப்பூர், ஜெர்மனி

சிங்கப்பூரும் ஜெர்மனியும் தங்களுக்கிடையிலான உறவை உத்திபூர்வப் பங்காளித்துவ அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கவுள்ளன.

இருநாட்டு உறவு வளர்ச்சியடையும் வேளையில் இம்முயற்சி எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், ஜெர்மனியின் தலைநகர் பெர்லினின் அந்நாட்டுப் பிரதமர் ஒலாஃப் ‌‌ஷோல்சைச் சந்தித்தார். அதற்குப் பிறகு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 9) இத்தகவலை வெளியிட்டது.

சிங்கப்பூருக்கும் ஜெர்மனிக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் பன்முகத்தன்மை கொண்ட உறவை திரு வோங்கும் திரு ‌‌ஷோல்சும் கருத்தில்கொண்டனர். அந்த உறவு கடந்த பல ஆண்டுகளில் வலுவடைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சு, அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

தற்போது ஒன்றிணைந்து செயல்படும் துறைகள், புதிய துறைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் தாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டை இருவரும் மறுவுறுதிப்படுத்தினர். வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் செய்தனர்.

சிங்கப்பூர் நிதி அமைச்சருமான திரு வோங், இம்மாதம் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஜெர்மனிக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகு 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அவர் பிரான்ஸ் செல்வார். தற்போது பிரான்ஸ் மட்டும்தான் சிங்கப்பூருடன் உத்திபூர்வப் பங்காளித்துவம் வைத்துக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகும்.

ஜெர்மானிய அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டைன்மையர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் திரு வோங் தமது பயணத்தின்போது சந்தித்தார்.

செவ்வாய்க்கிழமையன்று அட்லோன் கெம்பின்ஸ்கி ஹோட்டலில் சுமார் 300 வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களையும் அவர் சந்தித்தார். ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அவர்களை பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றுசேர்த்தது அவர்களிடையே உள்ள கம்பத்து உணர்வு என்று திரு வோங் சொன்னார்.

குறிப்பாக களேபரமான மாற்றங்களை எதிர்நோக்கும் உலகில் ஜெர்மனியுடனான நீண்டகால உறவை சிங்கப்பூர் மிகவும் பெரிதாகப் பார்ப்பதாக திரு வோங் கூறினார். உக்ரேன்மீது ர‌ஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து கூடுதல் போட்டித்தன்மையையும் பூசல்களையும் எதிர்கொள்ள உலகம் தயாராய் இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அதனால்தான் மேலும் அணுக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் உலகளவில் மேலும் நல்ல பலன்களைப் பெறும் முயற்சியில் ஈடுபடவும் நாடுகள் ஒன்றுசேர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியமாகிறது,” என்று அமைச்சர் வோங் விளக்கினார்.

சிங்கப்பூர் வளர்ச்சியடையத் தொடங்கிய காலத்தில் ஜெர்மனி உதவிக்கரம் நீட்டியதையும் திரு வோங் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!