அதிக வருகையாளர்களை ஈர்த்த பொங்கோல் வட்டார நூலகம்

அதிக வருகையாளர்களை ஈர்த்த பொங்கோல் வட்டார நூலகம்

1 mins read
bf21e917-77be-4391-906e-aef680f83fbf
எங்கள் தொண்டூழியர்களில் சிலர் உடற்குறையுள்ளோர்க்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர் எனத் திருவாட்டி லீ தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உடற்குறையுள்ளோர் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட சிங்கப்பூரின் முதல் பொது நூலகமாக பொங்கோல் வட்டார நூலகம் திகழ்கிறது.

இந்த நூலகம் தனது முதல் ஆண்டு நிறைவு விழாவை இவ்வாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி கொண்டாடியது.

சன்கேர் எஸ்ஜி தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களின் விளையாட்டுகளும் கைவினை நிகழ்ச்சிகளும் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இடம்பெற்றன.

2023ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பொது நூலகமாக பொங்கோல் வட்டார நூலகம் திகழ்கிறது என அந்நூலகத்தின் துணை இயக்குநர் வெரீனா லீ கூறினார்.

கடந்த ஆண்டுத் தொண்டூழியர்கள் உட்பட சமூக பங்காளித்துவங்கள் இந்த நூலகத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்காற்றி இருப்பதாகவும் திருவாட்டி லீ தெரிவித்தார்.

“எங்கள் தொண்டூழியர்களில் சிலர் உடற்குறையுள்ளோர்க்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பொங்கோல் கதைகள் கண்காட்சியில் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் வகையில் தொட்டுணரக்கூடிய வடிவங்களை உருவாக்க முயன்றார்,” என்று தொண்டூழியர்களின் சேவைக்கு அவர் புகழாரம் சூட்டினார்.

குறிப்புச் சொற்கள்