கரையோரப் பூந்தோட்டத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் மலர்க்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘கிளவுட் ஃபாரஸ்ட்’ குவிமாடத்தில் மே 5ஆம் தேதி வரை ‘அசேலியா’ மலர்களின் காட்சி இடம்பெறுகிறது.
இமயமலை மற்றும் ஜேம்ஸ் ஹில்ட்டனின் ‘லாஸ்ட் ஹரைசன்’ நாவலில் இடம்பெறும் கற்பனைத் தலமான ஷங்ரிலா ஆகியவற்றின் அடிப்படையில் ‘அசேலியா’ மலர்க்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் 15க்கு மேற்பட்ட ‘அசேலியா’ மலர் வகைகள் இடம்பெறுகின்றன.
இமயமலைப் பகுதியின் வடிவமைப்புடன் குங்குமப்பூ போன்ற பாரம்பரிய மருந்துத் தாவரங்களையும் இது காட்சிப்படுத்துகிறது.
மேலும், பத்தாவது முறையாக ‘டியூலிப்மேனியா’ நிகழ்ச்சியும் இடம்பெறவிருக்கிறது.
ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 26 வரை ‘ஃபிளவர் டோம்’ குவிமாடத்தில் டியூலிப் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
பாரம்பரிய டச்சுக் கலாசார அம்சங்களுடன் காற்றாலைகள், நீராலைகள் போன்றவையும் இதில் இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சிகள் பற்றிய மேல்விவரங்களுக்கு gardensbythebay.com.sg எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.