ஆற்றல்மிகு தமிழ் 2024: உரை மொழிகளில் உணர்வு மழை

ஆற்றல்மிகு தமிழ் 2024: உரை மொழிகளில் உணர்வு மழை

1 mins read
e472b6f9-dd93-4f5a-9674-b52a2c890305
உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய நிகழ்ச்சி மேடையில் ஏற்பாட்டாளர்கள், வருகையாளர்கள்.  - படம்: சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம்

மனத்தில் எழுச்சி தருகின்ற தமிழைப் பேசும்போது அடையும் உணர்ச்சிப் பெருக்கை வீட்டில் தாய் தந்தையுடன் பேசும் உருது மொழியிலிருந்தும் தாம் பெறவில்லை என்று ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற ‘ஆற்றல்மிகு தமிழ்’ நிகழ்ச்சியில் மேடைப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா கூறினார்.

தமிழ் மொழி விழா 2024ஐ முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டிலும் வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவிலும் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நமக்குள் ஆற்றல் குலையும்போது நமது வீழ்ச்சி தொடங்குகிறது என்று ஆற்றலின் முக்கியத்துவத்தைப் பற்றி சுவைபட பேசி வருகையாளர்களின் கைதட்டலைப் பெற்றார் முனைவர் பர்வீன்.

தமிழ் இலக்கணத்தில் வகுக்கப்பட்டிருப்பதைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டதோடு மேலும் பல இலக்கியச் சான்றுகளையும் சுட்டினார்.

முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, மாணவர்களின் நடனம், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு ஆகிய அங்கங்களை அடுத்து, சிங்கப்பூர்த் தமிழர் இயக்கத்தின் தலைவர் ரெ.செல்வராஜூ தலைமையுரை மற்றும் வரவேற்புரை வழங்கினார்.

திரு முரளி பிள்ளை தமது சிறப்புரையில் தமிழ் மொழியின் தொன்மையை எடுத்துக்கூறி, தமிழர்கள் தங்களுக்கிடையே தமிழில் பேச வேண்டுமெனக் கோரினார்.

குறிப்புச் சொற்கள்