பென்கூலன் ஸ்திரீட் கட்டடத்தில் தீ மூண்டது; 100 பேர் வெளியேற்றம்

பென்கூலன் ஸ்திரீட் கட்டடத்தில் தீ மூண்டது; 100 பேர் வெளியேற்றம்

1 mins read
cdd54b24-d0f5-4069-8755-4e93c5725206
தி பென்கூலன் கட்டடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பென்கூலன் ஸ்திரீட்டில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று தீ மூண்டது.

அந்தக் கட்டடத்திலிருந்து ஏறத்தாழ 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.

180 பென்கூலன் ஸ்திரீட்டில் உள்ள ‘தி பென்கூலன்’ கட்டடத்தின் 11வது மாடியில் தீ மூண்டதாக பிற்பகல் 2.15 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குடியிருப்புப் பகுதியையும் வர்த்தகப் பகுதியையும் கொண்டுள்ள அந்தக் கட்டடத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்