சைக்கிளோட்டியுடன் வாக்குவாதம்: பேருந்து ஓட்டுநருக்கு டவர் டிரான்சிட் அறிவுறுத்தும்

சைக்கிளோட்டி ஒருவருடன் சனிக்கிழமை (ஏப்ரல் 13) வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநருக்கு டவர் டிரான்சிட் நிறுவனம் அறிவுரை வழங்கும்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த டவர் டிரான்சிட் பேச்சாளர், “சைக்கிளோட்டிகளைக் கடந்தபோது பேருந்து ஓட்டுநர் அவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைக் கட்டிக்காத்தார்.

“எனினும், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வசைபாடி இருக்கக் கூடாது,” என்று சொன்னார்.

சைக்கிளோட்டிகளுடன் சாலையைப் பகிரும்போது அவர்களுக்குப் போதுமான இடம் கொடுக்க டவர் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் சொல்லித் தரப்படுவதாக அப்பேச்சாளர் கூறினார்.

சைக்கிளோட்டியுடன் அந்தப் பேருந்து ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி, எஸ்ஜிஆர்வி ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) பதிவேற்றம் செய்யப்பட்டது. திங்கட்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி, அது 1,100 கருத்துகளையும் 212,000க்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றது.

சைக்கிளோட்டி ஒருவர் சாலையைச் சூழ்ந்ததற்காக பேருந்து சேவை 856இன் ஓட்டுநர் பேருந்து இருக்கையிலிருந்து எழுந்து வந்து ஹாக்கியன் மொழியில் அவரிடம் உரக்கப் பேசுவதைக் காணொளியில் காண முடிகிறது.

“நான் உன்னிடம் சொல்கிறேன், சற்று உள்ளே செல்,” என்று அந்த சைக்கிளோட்டியிடம் பேருந்து ஓட்டுநர் கூறுகிறார்.

கோபமாக இருந்த அந்த சைக்கிளோட்டி அதற்கு இணக்க மறுக்கிறார்.

அந்தப் பேருந்து ஓட்டுநரை நோக்கி மூர்க்கத்தனமாக கையசைக்கும் சைக்கிளோட்டி, பதிலுக்கு ஹாக்கியன் மொழியில் சத்தமிடுகிறார்.

பேருந்துக் கதவுகளை மூடிய ஓட்டுநர், அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இணையவாசிகள் பெரும்பாலானோர், பேருந்து ஓட்டுநரின் செயலுக்கு அனுதாபம் காட்டினர். சில சைக்கிளோட்டிகளின் சுயநலமான பழக்கங்களைச் சாடிய அவர்கள், அத்தகையோருக்கு எதிராகக் கடுமையான சட்ட அமலாக்கம் தேவை என்று கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!