செந்தோசா கோவ்: விலை குறைப்புக்குப் பிறகு இரு நாள்களில் 65 வீடுகள் விற்பனை

செந்தோசா கோவ்: விலை குறைப்புக்குப் பிறகு இரு நாள்களில் 65 வீடுகள் விற்பனை

1 mins read
15603145-4b1e-4046-b087-778de2799b1c
செந்தோசா கோவ்வில் உள்ள ‘தி ரெசிடன்ஸ் அட் டபிள்யூ’ கூட்டுரிமைக் குடியிருப்பில் 65 வீடுகள் விற்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

செந்தோசா கோவ்வில் உள்ள ‘தி ரெசிடன்ஸ் அட் டபிள்யூ’ கூட்டுரிமை வீடுகளின் விலை 40 விழுக்காடு குறைக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 15, 16ஆம் தேதிகளில் 65 வீடுகள் விற்கப்பட்டன.

ஏப்ரல் 10ஆம் தேதிக்கும் 14ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வீடுகளைப் பார்க்க ஏறத்தாழ 3,200 பேர் திரண்டதாக சிட்டிவியூ பிளேஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அந்தக் கூட்டுரிமைக் குடியிருப்பில் 203 வீடுகள் அந்நிறுவனத்துக்குச் சொந்தமானவை.

ஏப்ரல் 15ஆம் தேதியன்று விற்பனைக்கு விடப்பட்ட 58 வீடுகளில் 45 வீடுகள் விற்கப்பட்டதாக சிட்டி வியூ ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஏப்ரல் 16ஆம் தேதியன்று கூடுதல் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அன்று மேலும் 20 வீடுகள் விற்கப்பட்டன.

வீடுகளை வாங்கியவர்களில் 94 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள்.

மற்றவர்கள் சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்